அன்னதானம்

ஊர் திருவிழா தெருவெங்கும் தோரணமும் புத்தாடை பூட்டி மக்களும் வாணவேடிக்கை சகிதம் உற்ச்சாகமாக கொண்டாடி கொண்டிருந்தனர்.

அப்பொழுது மைக்கில் ஊர் பெரியவர்,"நமது ஊர் அம்மன் திருவிழா முன்னிட்டு இன்று மதியம் அன்னதானம் நடைபெற இருக்கிறது இங்கனம் ஊர்மக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென விழா கமிட்டி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்."

"ஏலே மொக்கராசு ஊடு வரைக்கும் ஒரு சோலி போய்ட்டு வரன்"-பெரியவர்

"அப்புச்சிக்கு பேரபுள்ளைய கொஞ்ச நேரம் பாக்காம இருந்தா கைகால் ஓடாதுங்கலே போய்வாங்க ..."-மொக்க ராசு

"போடா கிறுக்குபயலே"என கூறி விட்டு தன் வீடு நோக்கி நடந்தார் பெரியவர்.ராமசாமி கவுண்டர் ஊர் பெரியவர் மிகவும் நல்லவர் உதவும் குணம் படைத்தவர் மனைவி அன்னம்.சென்ற வருடம் டவுனில் நடந்த விபத்தில் மகனையும் மருமகளையும் இழந்துவிட்ட வயதான தம்பதிகள்;வாழ்வதர்க்கு அர்த்தமாக இருப்பதே ஆறு வயதாகும் பேரன் சீனிவாசன் தான்.

"தாத்தா " வீட்டினுள் நுழைந்தவரின் காலை கட்டிக்கொண்டான் ..."சீனு"என்று அவனை வாரி அனைத்துக்கொண்டார்."பாட்டி எங்க ? செல்லம்".."தாத்தா பாட்டி சமையல் செய்ராங்க"..."என்ன சமையல் செய்ராலா?ஏ அன்னம்!அன்னம்!"..

"என்னங்க இப்போ ஏன் இப்படி கத்துரிங்க எனக்கு காது நல்லா கேட்கும்"-அன்னம்

"எனக்கு அப்டி தெரியலியே ஊர் திருவிழா அன்னதானம் கோயில் சார்பா நடக்கிறது ஊரே வந்து சாப்பிட னும்னு நா ரேடியோவில் சொல்லிட்டு வரன் நீ என்னனா சமையல் பன்ற"..."என்ன ஏன் கேக்குறிங்க உங்க செல்ல பேரன்தான் பசிக்குது நான் அங்கலாம் சாப்டமாட்டேன் வீட்லதான் சாப்டுவன்னு அடம் புடிச்சான்..."

பெரியவர் பேரனை பார்த்து கேட்டார்"ஏன் ராசா ஊரே சாப்பிடும் நமக்கென்ன?".."இல்ல தாத்தா எனக்கு புடிக்கல".." ஏன் கண்ணு சாமி சோறுதான?...
"தாத்தா நேத்து நாம இரண்டுபேரும் டவுனுக்கு போனமில்ல"..."ஆமா ராசா அதுக்கென்ன?"..."அங்க ஒரு வீட்ல நேரையா என்மாதிரி கொழந்தைங்க இருந்தாங்க இல்ல ?"...

"ஆமா அது அனாதைஇல்லம்னு நான் உனக்கு விளக்கம் கூட கொடுத்தனே"..."அவங்களுக்கு யார் தாத்தா சோறு தருவாங்க "..."அது யாராவது அன்னதானம் செய்வாங்கப்பா!"...

"அப்போ இல்லாதவங்களுக்கு தரதுதானே அன்னதானம் இருக்கரவங்களுக்கு தரது விருந்துதானே..தாத்தா நம்ம கோவில்ல தரதும் விருந்துதான்..உண்மையாவே அன்னதானம் னா அத என்னமாதிரியே அப்பா அம்மா இல்லாத அந்த கொழந்தைங்களுக்கு தர சொல்லுங்க தாத்தா..எனக்காவது நீயும் பாட்டியும் இருக்கிங்க...."

இதை கேட்டதும் கண்களில் கண்ணீர் சிந்தியவராக பேரனை இருக கட்டி கொண்டார்.இனி கோயில் சார்பாக மட்டுமல்ல தன்னால் முடிந்த சமயத்திலும் அந்த அனாதை குழந்தைகளுக்கு எதாவது செய்ய வேணண்டும் என முடிவு செய்தார் அதுவே உண்மையான இறை பணி எனவும் உணர்ந்து கொண்டார் பெரியவர்.

எழுதியவர் : சுரேஷ் குமார் (21-Jun-17, 7:27 am)
Tanglish : annathanam
பார்வை : 453

மேலே