பெண்களின் அக அழகை விரும்பும் ஆண்கள்

மஞ்சள் பூசிய முகம், நெற்றியில் சின்னதாய் ஒரு பொட்டு தலையில் மல்லிகைப்பூ என மங்களகரமாய், இயற்கை அழகோடு இருக்கும் பெண்களைத்தான் பெரும்பாலான ஆண்கள் விரும்புகின்றனர். அளவிற்கு அதிகமாக மேக் அப் போட்டு, கண்ணுக்கு மையிட்டு, லிப்ஸ்டிக் போட்டிருக்கும் பெண்களை ஆண்கள் விரும்புவதில்லை என்று உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அக அழகு முக்கியம்

ஆர்பாட்டமில்லாத அழகு, பாந்தமான முகம் பார்த்தாலே பற்றிக்கொள்ளும். அம்மாவைப் போல அம்சமான தோற்றத்தை விரும்பும் ஆண்களின் மத்தியில் அதீத மேக் அப் போட்டு செல்லும் பெண்கள் உதாசீனப்படுத்தப்படுகின்றனர் என்றும் அவர்களின் அக அழகையே எதிர்பார்க்கின்றனர் என்றும் உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

எளிமையே அழகு

அதேபோல உடை விசயத்திலும் கண்களை உறுத்தாத பாந்தமான, எளிமையான உடை அணிந்த பெண்களையை ஆண்கள் விரும்புகின்றனர். இயற்கை நிறத்தை வெளிப்படுத்தும் முகமும், எளிமையான உடையும் அணிந்த பெண்களே ஆண்களின் மனதில் இடம் பிடிக்கின்றனராம். சினிமாவிலோ, சாதரணமாக பார்த்து ரசிக்கவோதான் மேக் அப் அணிந்த பெண்கள். அதுவும் காஜல் அகர்வால், தமன்னா போன்ற நடிகைகளை ஆண்கள் ரசிக்கின்றனர் என்பதற்காக அனைவருமே மேக்அப் போட்டு அவர்களைப் போல கண்களை உறுத்தும் ஆடைகளை அணிந்து சென்றால் ஆண்களின் கேலி, கிண்டலுக்குத்தான் ஆளாக நேரிடும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

ஆழமான கண்கள்

மனதில் அழகை வெளிப்படுத்துவதில் பெண்களின் கண்களுக்கு தனி இடம் உண்டு. பெரும்பாலான இயற்கையான அழகை வெளிப்படுத்தும் கண்களைக் கொண்ட பெண்களைத்தான் ஆண்கள் விரும்புகின்றனராம். எனவே கண்களுக்கு அளவுக்கு அதிகமான மை தீட்டி ஆண்களை பயமுறுத்துவதை தவிர்க்கவேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை. அதேபோல் அடிக்கும் அளவிற்கு லிப்ஸ்டிக் போடாமல் சாதாரணமாக லிப் கிளாஸ் உபயோகிக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தனித்தன்மையும், தன்னம்பிக்கையும் நிறைந்த இயற்கை அழகான பெண்களே ஆண்களை கவர்கின்றனர். எனவே மேக் அப் போட்டு போனால்தான் அனைவரையும் கவரமுடியும் என்று தப்புக்கணக்கு போடவேண்டாம். பெண்கள் தங்களின் இயற்கை அழகை வெளிப்படுத்து விதமாக சென்றாலே ஆண்களுக்கு பிடிக்கும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

மயூரா அகிலன்

எழுதியவர் : (22-Jun-17, 2:12 pm)
பார்வை : 120

சிறந்த கட்டுரைகள்

மேலே