நான் தீண்டுவதெப்போது

அருகாமையில்
அழகாய் மயில்..!
அவள் பார்வையில்
மருகும் உயிர்....!

அவள் மெல்ல மெதுவாய்
அசைந்திடும்
அழகு தாஜ்மஹால் ..!

இவனுக்கு என்றே
இளமையை சுமக்கும்
பூமகள்…!

இடையின் வளைவுகள்
வளைகுடாக்களோ..?
பார்வை அலைகளுக்கு
அங்கு தடாக்களோ..?

மூன்றே நொடிகளிலே
நிறங்கள் மாற்றுகிறாள்..!
முடிவிலா அர்த்தங்களை - ஹைக்கூ
கண்களில் சொல்கின்றாள்..!

இமை அரண் திறந்தாள்
முதல் வரியாய்..!
இரு இதழ் விரித்தாள்
மறு வரியாய்...!
முரணாய் முடித்தாள்
மூன்றாம் வரியை…!

கருமுகில் கூட்டங்கள்
உரு மாற்றிக்கொண்டு...
திருமேனி தீண்டுதே
நான் எப்போது…...?

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (22-Jun-17, 3:07 pm)
பார்வை : 119

மேலே