காலச்சக்கரம்

காலத்திடம் எல்லா
கேள்விகளுக்கும்
பதில் உண்டு
கடவுளுக்கு தெரியாத
உண்மைகளும்
காலத்துக்கு தெரியும்...

காலம்
திரும்பி பார்ப்பதில்லை
திரும்பி வருவதுமில்லை
நாம் தான் கடந்த காலத்தை
திரும்பி பார்த்தும்
எதிர் காலத்தை
கற்பனையில் பார்த்தும்
நிகழ்காலத்தில் நிம்மதி இழக்கிறோம்...

காலம்
நாம் வைக்கும்
ஒவ்வொரு அசைவையும்
பதிவுசெய்து வைத்துள்ளது
இவைகள் எல்லாம் வரலாறாக
காலப்போக்கில் மாறி விடும்
அதை அழிக்க எந்த விதியும்
நம் மதிக்கு இன்னும் எட்டவில்லை...

காலம்
எத்தனையோ போதி
மரங்களை தந்துள்ளது
புத்தனாவதும்
உன் கையில் உள்ளது
போதிமர நிழலை வெறுத்து
சாதி வெப்பத்தில்
இதம் கண்டு பித்தனாவதும்
உன் கையில் உள்ளது....

காலம்
எல்லோருக்கும்
பொதுவானது
அது பாராபட்சம்
பார்ப்பதில்லை
அதை சரியாக
உபயோகித்தவன்
வெற்றியாளன்
விடாமுயற்சியுடன்
தொடருபவன் அனுபவசாலி
வீனடிப்பவன் பித்தன்...

காலம்
கருப்பு வெள்ளை நிறங்களை
மாற்றி மாற்றி அமைத்து
தன் கடமையை கண்ணியமாக
செய்துக்கொண்டே போகிறது...

எழுதியவர் : செல்வமுத்து.M (22-Jun-17, 5:15 pm)
பார்வை : 323

மேலே