காதல் பழக வா-24

காதல் பழக வா-24
விசித்திரமாய் மாறி வந்து
என் முன் நிற்கிறாய்...
நானோ அதிர்ச்சிக்கு மேல்
அதிர்ச்சி கொண்டு
தலைசுற்றி நிற்கிறேன்...

நேற்றுவரை விலகி சென்று
முறைத்துக்கொண்டு நின்றவள் நீ
இன்றோ காதல் என்று
சொல்லிக்கொண்டு என் கைபிடித்து
கதிகலங்க வைக்கிறாய்...

கனவா இல்லை நான்
எனக்குள்ளே வரைந்து பார்க்கும்
கற்பனையா நீ என்று
பலமுறை கிள்ளி பார்த்தும்
வலித்துக்கொண்டே இருக்கிறதே...
நீயோ விசித்திரமாய் என் முன்னே
சிரித்து கொண்டு நிற்கிறாய்.....


வீட்டிற்கு வந்த பின்பும் கூட ராதி இயல்பு நிலைக்கு திரும்பவில்லை, என்ன தான் கண்ணன் வெறுப்பேற்றி அவளின் சிந்தனையை மாற்ற முயற்சித்தாலும் ராதியின் மனம் கடந்தவைகளையே தான் சிந்தித்து கொண்டிருந்தது....

அந்த ஊருக்கும் கோவிலுக்கும் தனக்கும் ஏதோ சம்மந்தம் இருப்பதை போல ராதியின் உள்ளுணர்வு கூறிக்கொண்டே இருக்க அவளால் நடப்பு வாழ்க்கையில் இணைய முடியாமல் தவித்து கொண்டிருந்தாள்...

"என்ன ராதி, கோவிலுக்கு போய்ட்டு வந்ததுல இருந்து நீ என்னவோ ஒரு மாதிரியாவே இருக்கியே, என்ன ஆச்சு...எதையோ யோசிச்சிட்டே இருக்க, சரியா சாப்பிடல, எங்ககிட்ட கூட எதுவுமே பேசல, உனக்கு என்ன தாண்டி ஆச்சு"

"ராதி, உன்ன தாண்டி கேட்கறா, இப்படி அமைதியாவே இருந்தா என்ன அர்த்தம், உடம்பு சரி இல்லையா, இல்லை மனசு சரி இல்லையா, நீ இப்படியே இருக்கறது எங்களுக்கு கஷ்டமா இருக்குடி, வாய திறந்து எதாவது பேசு"
"விடுங்கடி, அவ ரொம்ப டயர்டா இருக்கா, நீங்க வேற பேச சொல்லி இம்சை பண்றிங்க, அவளை தூங்க விடுங்க, நாளைக்கு காலைல சரி ஆகிடுவா...ராதி நீ படுத்து தூங்கு, எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்"

ராதியின் தூக்கம் அவளை வேறு ஒரு உலகத்தில் பயணிக்க வைத்ததை அவளின் தோழிகள் ஒருவரும் அறியாமல் ராதியின் ஆழ்ந்த தூக்கத்தில் நிம்மதி அடைந்து விடியலை எதிர்நோக்கி காத்திருக்க ஆரம்பித்தனர்...

விடிந்து நீண்ட நேரம் ஆகியும் கூட ராதி தூக்கத்தில் தான் இருந்தாள்....அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என கண்ணன் சொன்னதால் ராதியின் ரூமிற்கு அவள் தோழிகள் கூட செல்லாமல் ஹாலில் ராதியை பற்றிய யோசனையில் நேரத்தை ஒட்டி கொண்டிருந்தனர்...

"ராதிம்மா.......ராதி...எங்க இருக்க, என் ராதி எங்க?...எங்க ஒளிச்சி வச்சிருக்கீங்க...ராதியை வர சொல்லுங்க....."

வந்த வேகத்தில் வினோ கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண, ராமநாதன் ராதியை தேடும் பணியை செய்துகொண்டிருந்தார்...

வினோவின் அலறலில் ஒட்டுமொத்த குடும்பமும் ஹாலில் ஆஜர் ஆக வினோவின் ஆர்ப்பாட்டம் அதிகம் ஆகி போனது...

"எல்லாரும் ஒண்ணு கூடி என் பொண்ணை என்கிட்ட இருந்து பிரிக்க பாத்துருக்கீங்கல்ல, உங்களை எல்லாம் நான் சும்மாவே விட மாட்டேன், எத்தனை அழகா டிராமா பண்ணீங்க, எல்லாத்தையும் நம்பி என் பொண்ணையே நான் சந்தேகப்பட்டுட்டேனே...இப்பவாது அந்த கடவுள் எனக்கு நல்ல புத்திய குடுத்தானே, இல்லைனா காலம் முழுக்க என் பொண்ணு இங்க இருந்து கஷ்டத்தை அனுபவச்சிருப்பா"
"ரமா, இவங்க யாரு, எதுக்கு இங்க வந்து இப்படி கூச்சல் போட்டுட்டு இருக்காங்க, இவங்க தான் ராதியோட அம்மாவா?"

"அது வந்து...."

"என்ன வந்து போய்னு இழுத்துகிட்டு இருக்க, சொல்ல வேண்டியது தானே, இவங்க பொண்ணை தான் ஏமாத்தி கூட்டி வந்து அடச்சீ வச்சிருக்கோம்னு, நீயும் ஒரு அம்மா தானே, பெத்த பொண்ணை அவ அம்மாகிட்ட இருந்து இப்படி கேவலமா பொய் சொல்லி பிரிச்சா எப்படி வலிக்கும்னு உனக்கு தெரியாதா? உன் பையனுக்கு பொண்ணு வேணும்னா ஊரு உலகத்துல எத்தனை பொண்ணுங்க இருக்கு, பாத்து கட்டி வைக்க வேண்டியது தான, என் பொண்ணை எதுக்காக இப்படி என்கிட்ட இருந்து பிரிச்சிங்க...உங்க பேச்சை நம்பி என் பெண்ணை நானே சந்தேகப்பட்டுட்டேனே.. நீங்க எல்லாம் நல்லா இருப்பிங்களா......”
ராதியை சந்தேகப்பட்டு அடித்து இத்தனை நாள் ஒதுக்கிவைத்த வேதனையில் வினோ கோவமும் கண்ணீருமாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிக்கொண்டிருக்க வெளியே சென்ற கண்ணன் இதை எதுவும் அறியாமல் வந்து சேர்ந்தான்....
"இங்க பாருங்க உங்க பொண்ணை நாங்க ஒன்னும் கடத்தி கூட்டிவந்து இங்க வச்சிருக்கலை, அவளா விருப்பப்பட்டு கண்ணனை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுக்கு மருமகளா வந்திருக்கா, கோவத்துல நிதானம் இல்லாம நீங்க பாட்டுக்கு ஏதாவது பேசிட்டு இருக்காதிங்க....எல்லாத்துக்கும் ஒரு வரைமுறை இருக்கு, நீங்க பேசறதெல்லாம் கேட்டுட்டு நின்னுட்டு இருக்க மாட்டோம், இவ்ளோ பேசற நீங்க பெத்த பிள்ளையோட ஆசையை புரிஞ்சிகிட்டு நடந்திருக்கணும், காதலிச்சது தெரிஞ்சும் இன்னொருத்தனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க அவசரப்பட்டு உங்க பொண்ணு வீட்டை விட்டு வர நீங்களே காரணமாகிட்டு இப்போ வந்து கூச்சல் போடறதுல ஒரு பலனும் கிடைக்க போறதில்ல, கண்ணனுக்கும் ராதிக்கும் ரிஷப்ஷன் வைக்க ஏற்பாடு பன்னிருக்கோம், மனசிருந்தா உங்க பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கணும்னு வந்து வாழ்த்திட்டு போங்க, இனி இப்படி சத்தம் போட்டா நல்லா இருக்காது, முதல்ல கிளம்புங்க"

"தம்பி என்ன பேசற, விடு..பொண்ண பெத்தவங்க, கோவத்துல எதோ பேசறாங்கன்னா நாம கூட ஏட்டிக்கு போட்டியா பேசணுமா,,,,,,இங்க பாருங்கம்மா, உங்க கோவம் நியாயமானது தான், இத்தனை வருஷம் பாசம் காட்டி கண்ணா வளர்த்த பொண்ணு இப்படி ஓடி வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டா பெத்தவங்க மனசு வேதனை பட தான் செய்யும் , ஆனா என்ன பண்ண, இந்த காலத்து பிள்ளைங்க காதல்னு வந்துட்டா அவசரமா எதாவது முடிவு எடுத்துட்டு பெத்தவங்கள கஷ்டப்படுத்திடுதுங்க....ஆனா எங்க புள்ள கண்ணன் தங்கமான புள்ள தான், ராதி கூட என்க வீட்டுக்கு வந்த மகாலக்ஷ்மியா தான் பார்க்கிறோம்...ரெண்டு பெரும் அப்டி ஒரு மனம் ஒத்த தம்பதியா தான் இருக்காங்க...அவங்களா விருப்பப்பட்டு பெரியவங்களை பற்றியெல்லாம் யோசிக்காம கல்யாணம் பண்ணிகிட்டாங்க, இனி பெரியவங்க நாம தான் நம்ப வீட்டு பிள்ளைகளை பத்தி யோசிக்கணும்...கோவத்தை விட்டுட்டு அவங்க எதிர்காலத்தை பத்தி யோசிக்கலாம்...கண்ணனுக்கும், ராதிக்கும் ரிஷப்ஷன் வச்சிருக்கோம், பெரியவங்க நாம ஒண்ணா சேர்ந்து அவங்களோட கல்யாண வாழ்க்கையை வாழ்த்தி தொடங்கி வச்சா அவங்க வாழ்க்கை நல்லபடியா இருக்கும், முறைப்படி நாங்களே வந்து அழை க்கிறதா தான் இருந்தோம் ஆனா அதுக்குள்ளே நீங்களே வந்துட்டீங்க, இதுவும் நல்லதுக்கு தான், நீங்க முதல்ல உட்காருங்க சம்மந்தி, இனி நடக்கபோறதா பத்தி பேசுவோம்"
அதுவரை பல்லை கடித்துக்கொண்டு அமைதியாக இருந்த வினாவிற்கு சம்மந்தி என்ற உபசரிப்பில் கோவம் எக்கச்சக்கமாய் ஏற துவங்கியது...

"என்னது சம்மந்தியா, யாரு உங்களுக்கு சம்மந்தி, என் பெண்ணை ஏமாத்தி தாலிகட்டிடா விட்ருவோம்னு நினைச்சீங்களா, எங்க உங்க உத்தமபுத்திரன், கூப்பிடுங்க அவனை, அன்னைக்கு வந்தப்போ எப்படியெல்லாம் பொய் சொன்னான், என் பொண்ணு காதலிச்சு விரும்பி அவனோட வந்ததா...இன்னைக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சி தான் வந்திருக்கோம், அவளோட பிரெண்ட் ராதிகாவே வந்து எல்லா உண்மையும் சொல்லிட்டா, இனி உங்க யாரையும் நான் நம்ப தயாரா இல்ல, என் பொண்ணை மட்டும் கூப்பிடுங்க...நீங்களா கூப்பிடறிங்களா, இல்லை நானா கூட்டிட்டு போகட்டுமா...."

கண்ணன் வந்தது தெரியாமல் வினோ பேசிக்கொண்டே போக கண்ணன் வினோவின் பேச்சிலிருந்து நிலைமை கைமீறி போவதை புரிந்துகொண்டான்...

ஹாலில் நடக்கும் சண்டையின் சத்தம் ராதியை தட்டி எழுப்ப ராதி கண்விழித்து தான் இருக்கும் நிலையை யூகித்திருந்தாள்....

"வினோ ராதி இங்க இருக்க எந்த ரூமிலயும் இல்லைம்மா, நான் மேல போய் தேடி பார்க்கிறேன், அங்கயும் இல்லைனா அடுத்து என் பொண்ணை நீங்க கடத்தி வச்சிருக்கிறதா கம்பளைண்ட் கொடுக்க போலீசுக்கு தான் போக போறேன்..."

"யாரு யாரைப்பா கடத்தி வச்சிருக்காங்க, யாரை தேடிட்டு இருக்கீங்க"

ராதியின் குரலை கேட்டு அத்தனை பேரும் திகைப்பில் இருக்க அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கவே ராதி ஹாலுக்கு வந்து சேர்ந்தாள்...

"அம்மா இப்படி ரெண்டு பேரும் காலையிலேயே வந்து நிற்கறீங்க, எப்படி இருக்கீங்க....ஆமா போன் பண்ணி சொல்லிருந்தா நானும் நேரமா முழிச்சி உங்களுக்காக விருந்தே செஞ்சி வச்சிருப்பேன்...நீங்க என்னனா இப்படி சொல்லாம கொள்ளாம வந்து எனக்கு சர்ப்ரைஸ் குடுக்கிறிங்களே...சரிம்மா, நான் போய் குளிச்சிட்டு வந்துடறேன், அப்புறம் என் கையாலேயே உங்களுக்கு நான் சமைச்சி பரிமாற போறேன், வெயிட் பண்ணுங்க வந்துடறேன்"

ராதியின் இந்த பேச்சில் அத்தனை பேரும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நிற்க கண்ணனுக்கோ முதல் முறையாக அதிர்ச்சியில் தலையே சுற்றியது....
"ராதி என்ன விளையாட்டு இது, உனக்காகவும் உன் வாழ்க்கைக்காகவும் தான் நாங்க இங்க வந்து கத்திக்கிட்டு இருக்கோம், நீ என்னனா முறைப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தவ மாதிரி விருந்து வைக்கறேன்னு சொல்ற, உன் வாழ்க்கையையே முன்னபின்ன தெரியாதவன் நாசம்பண்ணிருக்கான், நீ சவுகாசமா குளிச்சிட்டு வரேன்னு சொல்ற...என்ன ராதி ஆச்சு உனக்கு, புரிஞ்சு தான் பேசறயா"

"என்னமா சொல்றிங்க, கண்ணன் அத்தான் எனக்கு முன்னபின்ன தெரியாதவரா, நான் உயிருக்குயிரா காதலிச்சவர்மா… அவரை போய் எனக்கு முன்னபின்ன தெரியாதவர்னு சொல்றிங்களே...அவர் என் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டார்னா சொல்றிங்க, இல்லைம்மா, அவரை தவிர வேற யாரை கல்யாணம் பண்ணியிருந்தாலும் நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன், அவரை போய்..உங்களுக்கு என்னமா ஆச்சு, ஏன் இப்படி பேசி என்ன கஷ்டப்படுத்துறீங்க...எனக்கு அழுகை தான்மா வருது, நீங்க பேசறதையெல்லாம் கேட்க்கும்போது"என்று கண்கள் கலங்க நின்றிருந்த ராதி அத்தனை பேருக்கும் விசித்திரமானவளாக தெரிந்தா

எழுதியவர் : ராணிகோவிந் (22-Jun-17, 6:09 pm)
பார்வை : 611

மேலே