முத்தம்

நீ போதும் போதுமென
ஓதும் அளவிற்கு
சேமித்து வைத்திருக்கிறேன்
முத்தங்களை
முத்தகிடங்காய்..!

எதில் தொடங்கினாலும்
இறுதியில்
உன் முடிவுரையென்னவோ
முத்தத்தில்தான்..!

ஊடலுக்கு
முற்றுப்புள்ளியென
முத்தத்தை
வைத்துவிட்டு
கூடலுக்கு
பிள்ளையார்
சுழி போடுகிறாய் நீ..!

முத்தம் முத்தமென
மொத்தத்தையும்
எழுதிவிட்டேன்
சத்தமில்லாமல்
வழியனுப்பிவிட்டுப்போ..!
எப்பொழுதும்போல
ஒரு பறக்கும் முத்தத்தை..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (22-Jun-17, 6:09 pm)
Tanglish : mutham
பார்வை : 296

மேலே