கைலா

ஏண்டி பொன்னி அந்த தொலைக் காட்சிப் பொட்டில ஒரு அழகான பொண்ணக் காட்டறாங்களே, அவ யாரடி?
😊😊😊😊😊
பாட்டிம்மா அவுங்க ஒரு அழகான நடிகை. அவுங்க பேரு மறந்து போச்சுங்க பாட்டிம்மா.
😊😊😊😊😊
சரி. அந்தப் பொண்ணக் காட்டறபோது என்னவோ கைலாவோ மைலாவோன்னு சொன்னாங்களே. அது என்ன?
😊😊😊😊😊😊😊😊
பாட்டிம்மா நம்ம தமிழ்நாட்டுக்காரர் கைலாசம். அமெரிக்காவிலே இருக்கற மிகப் பெரிய பணக்காரங்கள்ல அவரும் ஒருத்தராம். அவரு ஒரு படத்தை இந்தியாவில இருக்கற எல்லா மொழிகள்லயும் தயாரிக்கப் போறாராம். அந்தப் படத்தில கதாநாயகியா நடிக்க நீங்க திரையில பாத்த அந்த அழகான நடிகையத்தான் ஒப்பந்தம் பண்ணிருக்காராம் தயாரிப்பாளர் கைலாசம்.
😊😊😊
அந்தப் படத்தோட பேரு என்னவோ சொன்னாங்களா. அதுக்குள்ள மறந்து போச்சுடி பொன்னி.
😊😊😊😊😊
அவரோட படத்துக்கு நல்லா பேராத் தேர்ந்தெடுக்க ஒரு போட்டி வச்சு அவருக்கு பிடிச்ச தலைப்புக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு தந்தாராம். அவரோட முழுப்பேரு பாலச்சந்திர கைலாசம். கரிகாலன் 'காலா' -ன்னு ரஜினியோட படத் தலைப்பு ஆன மாதிரி தயாரிப்பாளர் பேரு படப்பேரா இருக்கணும்னு படத் தலைப்பு போட்டிய அறிவிச்சபோதே தெரிவிச்சாரம். 'பாலா' -ங்கற தலைப்பு ரண்டாவது பரிசாம். ஐம்பாதாயிரம் ரூபாய். 'கைலா' -ங்கற தலைப்புக்கு முதல் பரிசு ஒரு லட்சம். அதுதான் அவரு 'கைலா' -வை இருபது மொழிகள்ல தயாரிக்கராராம். அதில பிரஞ்சு, ஜெர்மன், அரபி, ஸ்பானிஷ் ரஷ்ய மொழி, ஜப்பானிய மொழி, சீன மொழிகளும் அடங்குமாம்.
😊😊😊😊😊
பாகுபலிங்கற படத்த பல கோடி செலவு பண்ணி எடுத்தாங்களாமே.
😊😊😊😊😊
ஆமாம் பாட்டிம்மா. 'கைலா' -படத்த ஐயாயிரம் கோடி செலவு பண்ணித் தயாரிச்சு உலகம் முழுவதும் 50 ஆயிரம் திரையரங்கில அடுத்த தைப் பொங்கலுக்கு வெளியிடறாங்களாம்.
😊😊😊😊😊😊
அடேங்கப்பா. ஐயாயிரம் கோடியா?
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிரிக்க அல்ல. சிந்திக்க

எழுதியவர் : மலர் (22-Jun-17, 11:25 pm)
பார்வை : 183

மேலே