காண்பதரிது

அறிவை மிஞ்சும் ஆயுதம் ,🏹🔫🔪
தூயஅன்பில் மேலானதோர் தாய்மை ,🙂🙏
இல்லத்தை தாண்டியதோர் ஆலயம் ,🛐
இயற்கையன்றி ஓர் தெய்வம் ,🕉️
உயர் கல்வியை மிஞ்சிய செல்வம் ,💵💰
நம் கடந்த காலத்தினிலும் சிறந்ததோர் ஆசான் ,🤴
நாம் பிறந்த ஊரை தாண்டிய சொர்க்கம் ,🏙️
அறத்திலும் அறிய புண்ணியம் ,🤝
பிள்ளை உள்ளம் போல் வெள்ளை உள்ளம் ,👶
கண்ணீர் சிந்தாத காதல் மனம் ,😭😭💑
காலம் கடத்தி போன அழகிய தினம் ,🏃💃👨‍👨‍👦‍👦🛳️
சுயநலம் கொன்ற உயர்ந்த குணம்..👏👏👌👌
இதுபோல இன்னும் சில
விண்கலம் ஏறி 🚀🚀✈️
பிரபஞ்சம் எங்கும் தேடினும்
காண்பதரிது ...!!!!🤞🤞🤞

என்றும் ...என்றென்றும் ..👈👈

எழுதியவர் : ஜீவன்.. (22-Jun-17, 11:38 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 67

மேலே