தாய்ப் பாசம்

மலை நாட்டு பெண் அவள்
அடுப்பிற்கு சுள்ளி உண்ண
கனி,கிழங்கு தேடி கானகம்
உள்ளே சென்றாள்-அவள்
புடைவையில் குறுக்காய்
மறைந்திருந்தது அவள்
கைக்கு குழந்தை-இப்போது
பொறுக்கிய சுள்ளிகள் கைகளில்
இறக்கிய பெரிய பலா பழம் தலையில்
ஆடி ஆடி அசைந்து அசைந்து
வீடு நோக்கி செல்கின்றாள் -அங்கு
அவள் போகும் பாதையில் வந்து
நின்றது ஒரு வேங்கைப் புலி
பெண்ணே என் பசிக்கு உன்
கைக்குழந்தையை தந்துவிடு
உன்னை விட்டுவிடுகிறேன் என்றது
தாயவள் கூறுகின்றாள் "வேங்கைப் புலியே
உன் பசிக்கு இதோ என்னை ஏற்றுக்கொள்
என் குழந்தையை ஒன்றும் செய்து விடாதே
என்றாள்"
அத்தாயின் பாசத்தில் மெய் மறந்த வேங்கை
தாயே நீ நீடு வாழ்க , உன் பாசம் நீடு வாழ்க
உன் தாய்ப் பாசத்திற்கு தலை வணங்குகிறேன்
சென்று வா தாயே " என்றதாம்
தாய் என்பவள் அன்பின் நீர் ஊற்று
தியாகச் செம்மல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Jun-17, 10:15 am)
பார்வை : 92

மேலே