திருமணமென்னும் நாடகம்

ஆடம்பரமும், ஆதாரமும் தேடிடும் உலகிலே, இருமனமொத்த இல்வாழ்வென்பது கானல்நீர் போலே...

ஊர் கூடி வாழ்த்த, கெட்டமேளம் கொட்ட, கட்டிய தாலியும் நிலைப்பதில்லை கன்னியவள் கழுத்திலே...
வந்தவரெல்லாம் மனதார வாழ்த்தினார்களா என்பதெல்லாம் சந்தேகத்திலே...

ஐயர் வந்து ஓதிய சமஸ்கிருத மந்திரம், அர்த்தம் புரியாது சொல்லவே சக்தியற்று போகும் போலே...

தாலி கட்டும் போது ஊரைக் கூட்டிய தம்பதியினரே,
விவாகரத்து வாங்கி பிரிகையில் ஊரைக் கூட்டித் தாலியைக் கழட்டுவதில்லையே...

சேருதல் மகிழ்ச்சியான விடயமென்றால்,
சேர்ந்து வாழப் பிடிக்காது பிரிதலும் மகிழ்ச்சியான விடயம் தானே...
ஊரைக் கூட்டி அதே கெட்டிமேளம் முழங்கத் தாலியைக் கழட்டலாமே...

அன்பின் நிதர்சனம் அறியாத அறிவிலிகளே,
இல்லறத்தின் மாண்பறியா கற்புநெறி தவறியோரே,
அன்பைக் கொடுப்பதும், அன்பைப் பெறுவதும் வாழ்வின் எளிய தத்துவமென்றுணராத உங்கள் நாடக வாழ்க்கையைக் கண்டு மனமொப்பாவிடிலும் சிரிப்பு சிரிப்பா வருகிறதே...
என்செய்வேன்?
சிரிப்பை அடக்க முடியவில்லையே...

எங்கே செல்கிறீர்கள் அறிவிலிகளே?
விவாகரத்து வாங்கவா?
வாழ்த்துகள் எனதன்பு குழந்தைகளே...
உண்மையை உணருங்களே...
சிந்தித்துச் செயலாற்றுங்களே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (23-Jun-17, 10:37 am)
பார்வை : 474

மேலே