கோபம்

ரஞ்சித் ஓர் ஆணழகன். நல்ல நிறம், ஓரளவுக்கு பெண்மனிகளை கவர்ந்து இழுக்கும் அழகு. நிறைய பெண்கள் இவனுடன் அதிக நேரம் கடலை போட வேண்டும் என்று ஏங்கி கிடைக்கின்றனர். எப்பொழுதுதான் இவனின் கடை கண் பார்வை தன் மேல் விழும் என்று சுமாரான அழகுடன் இருக்கும் பெண்கள் காத்து கிடக்கின்றனர். ஆனால் இதையெல்லாம் அறிந்தும் அறியாமல் போல் இருப்பதற்கு ரஞ்சித்தின் வாழ்ந்த சூழ்நிலை அப்படி. பெண்கள் மேல் அறவே நாட்டம் இல்லாதது போல் வாழ்ந்து தன்னையும் ஏமாற்றி கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றி வந்தான். ரஞ்சித் தற்பொழுது இருபது வயது நிறைந்த கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவன். இவன் பெற்றோர்களுக்கு ஒரே பிள்ளை. இவன் பெற்றோர்கள் காதல் திருமணம்தான். அவர்கள் அவர்களுடைய பெற்றோர்களை எதிர்த்து சொந்த காலில் நின்று சொந்தமாக சம்பாதித்து யாரையும் எதிர்பார்க்காமல் ஊரார் மூக்கு மேல் விரல் வைக்கும் அளவுக்கு திருமணம் செய்து கொண்டனர் ரஞ்சித்தின் பெற்றோரோகள்.

தற்பொழுது விவகாரத்தாகி ஆளுக்கொரு பக்கம் இருக்கிறார்கள். விவாகரத்தான புதிதில் ரஞ்சித் மாதம் ஒரு முறை அம்மாவுடனும் மறு மாதம் அப்பாவுடனும் என்று தவணை முறையில் மாறி மாறி கவனித்தனர். இப்பொழுது ரஞ்சித் கல்லோர்ரி சென்ற பின் பெற்றோருடனான தொடர்பு மிகவும் குறைந்து போனது. பெற்றோருடைய பாசம் என்ன வென்றே தெரியாமல் பாதி வாழ்க்கை ஓடி போனது ரஞ்சித்துக்கு. ஆதலால் என்னவோ ரஞ்சித் காதல், பெண்கள் என்றாலே சற்று தூரம் சென்றே விடுகிறான். ஆனால் ரஞ்சித்தின் ஆழ் மனதில் கல்யாணம் செய்து கொண்டு வாழனும் என்றே ஆசை இருந்தது. அவன் எதிர்பாக்கும் பெண் சுமாரான அழகுடன் இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் கோபம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவலாய் இருக்க வேண்டும் என்று கோட்டை கட்டி வைத்திருந்தான்.

அந்த வருடம் தான் இடை நிலை பள்ளி வாழ்க்கையை முடித்து விட்டு கல்லூரிக்கு காலடி எடுத்து வைத்திருந்தாள் வனித்தா. அப்படி ஒன்றும் அழகில்லை என்ற பாடலுக்கொப்ப சுமாரான அழகுடன் தான் இருந்தாள். அந்த பாடலில் தோன்றும் அஞ்சலி போலவே இருந்தாள் வனித்தா. அவள் கொஞ்சம் கருமை வண்ணத்தில் இருந்தாலும், அவளின் உடலழகு அனைவரையும் திரும்ப வைக்கும். சற்று பெருத்து அழகிய இரு மார்பகங்கள், அனைத்து ஆண்களின் கண்கள் அங்கே போகமல் போகாது. அவளின் இடை அழகு சொல்லவா வேண்டும், மற்றும் பின்னழகு சற்று பெருத்தும் சதை பிடிப்புடன் இருக்கும் அவளின் இடைகளும் அழகாக இருந்தன. மொத்தத்தில் பிரம்மன் செதுக்கிய சிலை போலே இருந்தால் வனித்தா.

அன்று கல்லூரிக்கு முதல் நாள் அவளுக்கு, யாரை பார்க்க வேண்டும் என்று செய்வதறியாது யாரையோ எதிர்பார்த்து அங்கும் இங்குமாய் பார்த்து கொண்டிருந்தாள். கல்லூரிக்கு முதல் நாள் அல்லவா ஆதலால் அதிகாரப்பூர்வ உடையை உடுத்திருந்தாள் வனித்தா. வெள்ளை நிற முழுக்கை சட்டையை அரைக்கை வரைக்கும் மடித்து விட்டிருந்தாள். கருப்பு நிற முழுக்கால் சட்டையை அளவு எடுத்து தைத்து உடுத்தி வந்திருந்தாள். அவளுடைய நிறத்திற்கும் வெள்ளை சட்டை கருப்பு நிற கால் சட்டையும் அவளுடைய அழகை அதிக படுத்தியது. ஒரு சில ஆண்கள் ஜொள்ளு விட்டே சென்று கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அங்கே வந்த ரஞ்சித் கண்டும் காணாதது போல் சென்றான். இது அவளுக்கு வித்தியாசமான ஒரு நபரை காண்பது போல் இருந்தது. உதவி கேட்பதற்கு இவர்தான் சரியான ஆள் என்று தீர்மானித்து “excuse me sir” என்றாள். அவன் திரும்பி அவளை பார்த்தான். அவளும் நோக்கினாள், இவனும் நோக்கினான். கண்ணும் கண்ணும் நோக்கியா, என்ற பாடல் வனித்தா மனதினில் ஒலித்தது. அவனின் அழகிய சாக்லட் ப்ரவ்ன் கண்ணை பார்த்து மயங்கிய வண்ணம் தடுமாறி கேட்க வந்ததையே மறந்து போனாள். ரஞ்சித்தோ அவள் அழகை ரசித்தவாரே பார்வையை மேலிருந்து கீழ் வரை நோட்டமிட்டான்.

சற்று நேரத்தில் அவன் பார்வையை கவனித்த வனித்தா சுதாரித்து கொண்டு “பொறியிலாளர் பிரிவுக்கு எப்படி போகணும்” என்றாள்.

“என்னுடன் வா” என்றான் ரஞ்சித்.

அவளும் அவன் பின்னாள் சென்றாள். அவனும் அவள் செல்ல வேண்டிய இடத்திற்கு கூட்டி வந்தான். அவளும் நந்தி என்று சொல்லிவிட்டு இருவரும் அவ்விடத்தை விட்டு அகன்றனர். இப்படி பல விசயங்களுக்காக அவனின் உதவியை நாடினாள். அவனும் சலிக்காமல் செய்து கொடுத்தான். அவளும் யாருடனும் இவனிடம் பழகுவதை போல் வேறு யாருடனும் பழகியதில்லை.

இருவரின் மனதிலும் ஆளுக்கொரு ஆசையும் காதலும் இருந்தது. ஆனால் வெளிப்படுத்தவில்லை. இவ்வாறாக ஒரு வருடம் முடிந்தது. ரஞ்சித் படிப்பு முடியும் தருவாயிலிருந்தது. அப்பொழுதுதான் வனித்தாவின் இதயத்தில் ஓர் வலி ஏற்பட்டது. அது என்னவென்று தெரியவில்லை, ஆனால் அவனை விட்டு பிரிவதை இதயம் ஏற்றுகொள்ளவில்லை என்பது மட்டும் புரிந்தது. இது என்னவென்று தெரியவில்லை.

அடுத்த நிமிடத்தில் ரஞ்சித் வனித்தாவை தேடி வந்தான். “ஹாய் வனித்தா, இங்கே என்ன பன்றே. நான் எங்கெல்லாம் உன்னை தேடுகிறேன் தெரியுமா. எனக்கு இன்றோடு படிப்பு முடிகிறது. இதோடு உன்னை எப்போ சந்திப்பேன் என்று தெரியாது. வனித்தா யாருடைய அன்பும் ஆதரவும் இல்லாமல் காட்டு செடி போல் வளர்ந்தேன். நீ வந்த பிறகுதான் என் மனதில் சந்தோசம் எல்லாம் வந்தது. என்னால் ஒரு நாள் கூட உன்னை பார்க்காமல் இருக்க முடியாது. ஆமாம், நான் உன்னை காதலிக்கிறேன், வனித்தா” என்றான் ரஞ்சித்.

அதை கேட்ட அவளுக்கு இப்பொழுதுதான் புரிந்தது த்ஹனும் அவன் மேல் காதல் வயப்பட்டிருக்கிறோம் என்று. ஒரு பக்கம் சந்தோசம் வந்தாலும், அவள் சட்டென்று என்ன சொல்வது என்று ஆடித்தான் போனாள்.

“ரஞ்சித் எனக்கும் உன் மேல் காதல்தான், ஆனால் உன் காதலுக்கு ஏற்றவள் நான் அல்ல. என்னை மன்னித்து விடு” என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

அவளின் இச்செயல் ரஞ்சித்துக்கு பேரிடியாக விழுந்தது. அவன் ஏமாற்றத்தின் உச்சகட்டத்தில் இருந்தான். சிறு வயதில் பெற்றோரின் பாசத்தை நினைத்து ஏங்கி ஏமாந்தவனுக்கு, காதல் தந்த ஏமாற்றம், அனைத்தும் ஒன்று சேர்ந்து அவனை ஆட்டி படைத்தது.

ஒன்று நான் இருக்க வேண்டும் இல்லை, அவள் இருக்க வேண்டும் என்று அவளை பழி வாங்க துடித்தான். அவன் மனம் பெரிதும் பாதித்திருந்தது. கையில் இருந்த போத்தலை எடுத்து அருகிலிருந்த நாற்காலியில் உடைத்து கையில் கீறி கொண்டான். வனித்தா என்று கத்தினான்.

வருடங்கள் பல ஓடின. வனித்தா ஒரு நிறுவனத்தில் பொறியிலாளராக பணியாற்றி வந்தாள். அவளின் வாழ்க்கையோ, புதிய வீடு புதிய வாகனம் என்று மிகவும் வசதியும் ஆடம்பரமுமாக நகர்ந்தது.

அவளுக்கு அன்று பெண் பார்க்கும் படலம் அவளின் பெற்றோர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அவளும் விடுமுறை சொல்லிவிட்டு வீட்டில் பெண்ணாக அலங்காரம் படுத்திக் கொண்டிருந்தாள்.

மாப்பிளை வீட்டார் காரில் வந்திறங்கினார். காரிலிருந்து மாப்பிள்ளை வந்திறங்கினார். வனித்தா மாப்பிள்ளைக்கு வணக்கம் சொல்லி விட்டு மெல்ல முகத்தை பார்த்தாள், ஆடியே போய்விட்டாள். மாப்பிள்ளை வேறு யாரும் இல்லை ரஞ்சித்தான். வனித்தாவுக்கு இடி விழுந்தது. ரஞ்சித் எதுவும் அறியாதது போல் மெளனமாக புன்னகைத்தான். ரஞ்சித் வனித்தாவிடம் தனியாக பேச வேண்டும் என்றான். இருவரும் தனி அறைக்கு சென்றனர்.

அங்கே ரஞ்சித், “வனித்தா எப்படி இருக்க, புதிய வாகனம், புதிய வீடு ஆனால் பழைய காதலன் பரவாயில்லையா? நான் காதல் செய்தபோது என்னை வேண்டாம் என்றாயே, இப்போ எப்படி வேண்டாம்ன்னு சொல்லப் போகிறாய்? என்னை வேனடம்னு சொல்லி விட்டு நிம்மதியாய் இருந்து விடுவாயா இல்லை, வேறொருவனை கல்யாணம் செய்து கொண்டு வாழத்தான் விட்டு விடுவேனா? என்றான் ரஞ்சித்.
“ரஞ்சித் நான் சொல்வதை கேளுங்க” என்றாள் வனித்தா.

“போதுண்டி என்னை ஏன் வேண்டாம் என்று சொன்னாய், உன்னை சும்மா விட மாட்டேன்”, என்றான் ரஞ்சித்.

“என்னை மன்னிச்சிருங்க, இப்போ தான் நான் உங்களை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறேனே. என்னையே நான் உங்களுக்கு தருகிறேனே, பின் ஏன் இந்த கோபம்” என்றாள் வனித்தா.

“நான் உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன். ஆனால் உன்னோடு வாழ்வதற்கு இல்லை, உன்னை பழிவாங்கத்தான்” bye என்று அகிருந்து சென்றான். பிறகு திரும்பியபடி “முதலிரவில் உன்னை கொல்லுகிறேன் பார்” என்றான் ரஞ்சித்.

கல்யாணமும் முடிந்தது. விருந்து அது இதுன்னு மிக விமரிசயாக நடந்து முடிந்தது. முதலிரவும் வந்தது. வனித்தாவுக்கு இது இறுதி இரவு என்றே பயந்தாள். ரஞ்சித் முதலிரவு அறையில் காத்திருந்தான். அவள் பயந்து பயந்து அறைக்குள் வந்தாள். அவளை பார்த்தவுடன் அவன் ஆவேசமாக எழுந்து கத்தியால் குத்த சென்றான். “ஆஆஹ்ஹ” என்று கத்தினாள், நாள் வீளை ஒன்றும் ஆகவில்லை. ஏனென்றால் அவளின் பிரம்மை. சுயநினைவுக்கு வந்தவள் கட்டிலில் பார்த்தாள். அவன் அங்கே அழுது கொண்டிருந்தான். வனித்தா அவனின் கை மேல் கையை வைத்தாள்.

“உனக்கு தானே என்னை பிடிக்காதே பிறகு ஏண்டி என்னை கல்யாணம் செய்துகொண்டாய்? வேறு எவனும் கிடைக்கலையா உனக்கு” என்றான் ரஞ்சித்.

“எனக்கு உன்னைதாண்டா பிடிக்கும்” என்றாள் வனித்தா.

“பிறகு ஏண்டி நான் காதலை சொன்ன சமயம் என்னை மன்னித்து விடுன்னு சொன்னாய்”? என்றான் ரஞ்சித்.

“நீங்க காதலை சொன்னா... நாங்க உடனே ஏத்துக்கணுமா? பொண்ணுங்க நாங்க அப்படி இப்படிதான்னு பிகு பண்ணுவோம், அசடு இது கூட தெரியலையே” என்றாள் வனித்தா.

“அடிப்பாவி, தேவையில்லாம இத்தனை வருஷத்தை வீணாக்கிட்டாயே? தெரிஞ்சுருந்தா அப்பவே முடிச்சுருப்பேன்” என்றான் ரஞ்சித்.

வனித்தா அவனை கட்டியணைத்தாள். அவன் இடுப்பில் சொருகிருந்த கத்தி கீழே விழுந்தது. அவள் அதை பார்த்து வியந்தாள்.

“இது என்ன, முதலிரவில் கத்தியெல்லாம்” என்று கீழே குனிந்து எடுத்தவள், சதக்... சதக்... என ரஞ்சித்தின் வயிற்றில் குத்தினாள். மீண்டும் வெளியே எடுத்து மீண்டும் குத்தினாள். ரஞ்சித் கீழே விழ கத்தினாள் வனித்தா.

அலறியடித்து கொண்டு ஓடி வந்தனர் உறவினர்கள் அனைவரும். கதவை தட்டினார்கள் பதறிய படியே அறையின் வெளியே, உள்ளே வனித்தா கத்திய படியே அறையின் கதவை திறக்காமல் அதிர்ச்சியில் உறைந்தாள். வனித்தாவின் அப்பா பொறுமை தாங்காமல் கதவை உடைத்து உள்ளே வந்தார். அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி உள்ளே வந்து பார்த்த பொழுது.

காவல் நிலையத்தில் வனித்தா மற்றும் உறவினர்கள்.

முதலிரவில் கொடுரம் கொலையா தற்கொலையா? என நாளிதழ்கள் தன முகப்பக்கத்தை அழகு படுத்தி இருந்தன.

விசாரணை அதிகாரி தன் வாய் வேலையை வனித்தாவிடம் இருந்து ஆரம்பித்தார். என்ன நடந்தது என?

“முதலிரவு அறையில் நான் வரும் வரை காத்திருந்த ரஞ்சித், நான் உள்ளே நுழைந்தவுடன், என் கண் முன்னே கத்தியை எடுத்து தன்னை தானே குத்தி தற்கொலை செய்து கொண்டார்” என்று வாக்குமூலம் கொடுத்தாள் வனித்தா.

அவர்கள் பல கோணங்களில் துப்பறிந்ததில் தற்கொலை என்று காவலர்கள் நம்பினர். மேலும் கத்தியில் பதிந்து இருக்கும் கைரேகையை பரிசோதித்ததில் ரஞ்சித்தின் கைரேகை மட்டுமே இருந்திருக்கிறது. ஆதலால் தற்கொலை தன திட்ட மிட்ட கொலை இல்லை என கோப்பை மூடிவிட்டனர்.

இது எப்படி சாத்தியம், ஆம் முதலிரவுக்கு உள்ளே செல்லும் முன் வனித்தா கைகளில் கைரேகை பதியாத ஒரு பசை போன்ற பிளாஸ்டிக்கை அணிந்திருந்தாள். காரியம் முடிந்த பின் பிளாஸ்டிக்கை பிய்த்து எடுத்தாள்.

மனதுக்குள் மகிழ்ந்தாள், எந்தவொரு தடயமும் இல்லாமல் ரஞ்சித்தை தீட்டு கட்டி கட்டியதை எண்ணி. பல கோணங்களில் பல்வேறு தலைப்பிட்டு நாளிதழ்கள் தத்தம் கற்பனை வளத்தை தட்டி விட்டிருந்தனர்.

வனித்தாவும் பல மாதங்கள் மூக்கை சிந்திவிட்டு இயல்பு நிலைக்கு வந்தவளாய் நடித்தாள். அவளின் நடிப்புக்கு உலகளாவிய விருதே கொடுக்கப்பட வேண்டும் அப்படி ஒரு நடிப்பு.

அன்றிரவு வனித்தா தனிமையில் ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்கி இருக்க, அலைப்பேசி ஒலித்தது, எடுத்து பேசினாள், மர்ம குரல், “ஹாய், வனித்தா எப்படி இருக்க? அதிக நாளாகி விட்டது உன்னை பார்த்து” என்றது.

“யார் நீங்கள்” என்றாள் வனித்தா.

“என்னை தெரியலையா”? ஆக்ரோஷமாக சிரித்தான்.

வனித்தா குரலை சற்று உயர்த்தி கேட்டாள். “ஹலோ யார் நீ” என்று.

அந்த குரல் கூறியது, “நான் யாரென்று நீ குத்தி கொன்றாயே உன் கணவன் ரஞ்சித் அவனை கேள்” என்றது.

ஆடிபோனாள் வனித்தா. தான் கொலை செய்த விஷயம் என் பெற்றவர்களுக்கூட தெரியாது இவனுக்கு எப்படி தெரிந்தது என்று குழம்பினாள்.
“யார் நீ உனக்கு என்ன வேணும்” என்றாள் வனித்தா.

“பரவாயில்லையே இது தான் நல்ல பிள்ளைக்கு அழகு, நேரடியாக விசயத்திற்கு வந்து விட்டாயே” என்றது மர்ம குரல்.

“எவ்வளவு பணம் வேண்டும்” என்றாள் வனித்தா.

“எனக்கு பணம் எல்லாம் வேண்டாம், எனக்கு நீதான் வேண்டும்” என்றது குரல்.

அவன் அப்படி கேட்டதும் வனித்தா கடுமையாக கடிந்தாள். அந்த குரல் மேலும் சிரித்தது. “என் குரலை கிட்டும் உன்னால் கண்டு பிடிக்க முடியவில்லையா? நான்தான் ரஞ்சித். பேசாமல் நான் சொல்லும் இடத்திற்கு வா” என்று வைத்து விட்டது அலைபேசியை.

வேறு வழி இல்லாமல் வனித்தா அந்த குரல் வரச் சொன்ன இடத்திற்கு வந்தாள். வனித்தா பல குழப்பங்களுடன், நான் கொன்றது ரஞ்சிதானா இல்லையா? என்று வந்தடைந்தாள். தூரத்தில் ஒர் உருவம் மெல்ல நடந்து அருகே வந்தது. அருகே வர வர நடுங்கினாள் வனித்தா.

அருகே வந்தவுடன் மெல்ல முகம் தெரிய ஆரம்பித்ததும் அதிர்ந்தாள், கண் எதிரில் நிற்பது ரஞ்சித்.

“ரஞ்சித் நீயா? நீ எப்படி உயிரோடு” என கேள்வி எழுப்பினாள்.

“இல்லை”, என்றான் ரஞ்சித்.

“அப்படி என்றாள் நான் அன்று குத்தியது யாரை” என்று தன்னையும் அறியாமல் கேட்டதுதான் தாமதம்.

அப்படி வனித்தா கேட்ட மறுகணம், ரஞ்சித் கைத்துப்பாக்கியை எடுத்து நீட்டி, “கைகளை உயர்த்து, மீண்டும் மறுபடியும் சொல் என்ன சொன்னாய் முதலில்” என்று ரஞ்சித் மிரட்ட.

“இல்லை அது வாய் தவறி” என்று வனித்தா கூறி முடிப்பதற்குள். ரஞ்சித் மீண்டும் மிரட்டினான் “பொய் சொல்லாதே, சொல் என்ன சொன்னாய்”.

“அப்படி என்றாள் நான் அன்று குத்தியது யாரை” என்று சொன்னேன் என்றாள்.

அடுத்த நிமிடம் ஒரு காவல் படையினர் சுற்றி வளைத்து கொண்டனர் வனித்தாவை.

வனித்தா உளவுத் துறையின் புலன் விசாரணைக்கு ஆளானாள். ரஞ்சித் தலைமையில்தான் புலன் விசாரணை நடந்தது.

இருட்டறையின் நாற்காலியில் வனித்தா. ரஞ்சித் உள்ளே வர. அவனை பார்த்து புன்னகைத்தாள், “நீயும் அவங்க ஆள்தானா”? என்றாள்.

“எப்படி இருக்கிற ரஞ்சித்” என்றாள்.

“மன்னிக்கணும் வனித்தா” நான் உன் காதலன் அல்ல, விசாரிக்க வந்த அதிகாரி” என்றான் ரஞ்சித்.

“ஓ... அப்படியா, எதற்காக என்னை கைது செய்து இருக்கிறீர்கள், தெரிஞ்சிக்கலாமா”? என்றாள் வனித்தா.

“ரஞ்சித்தை கொலை செய்த குற்றத்திற்காக” என்றான் ரஞ்சித்.

“நான் தான் ரஞ்சித்தை கொலை செய்யவே இல்லையே” என்றாள் வனித்தா.

“என்ன ரொம்ப புத்திசாலித்தனமாக பேசுகிறாய் என நினைப்பா? சொல்கிறேன் கேள். நீ கொலை செய்தது என் உருவில் இருக்கும் குமாரை” என்றான் ரஞ்சித்.

அதிர்ந்தாள் வனித்தா.

“ஆம், குமார் ஏதோ ஒரு காரணத்திற்காக ரகசியமாக என் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜெரி செய்திருக்கிறான். மருத்துவரே வாக்குமூலம் கொடுத்துள்ளார். அது மட்டும் இன்றி குமார் இறந்து விட்டதாக அனைவரையும் அவனே நம்ப வைத்திருக்கிறான்” என்றான் ரஞ்சித்.

“குமார் அப்படி செய்ய காரணம்”? என கேட்டாள் வனித்தா.

“அதை நான் சொல்வதற்கு முன் நீ ரஞ்சித்தை அதாவது என்னை கொலை செய்ய காரணத்தை நீ சொல்ல வேண்டும்” என்றான் ரஞ்சித்.

“சொல்கிறேன்” என்றாள் வனித்தா. ரஞ்சித் வாக்குமூலத்தை பதிவு செய்தான்.

“நான் குமாரை காதலித்தேன். அவனும் என்னை காதலித்தான். ஆனால் சொல்லிக்கொள்ளவே இல்லை. எங்களின் காதல் ஒரு கேள்வி குறியோடுதான் போய்கொண்டிருந்தது. அந்த சமயம் தான் நீ வந்து என்னிடம் காதலை சொன்னாய். அன்று உன் காதலை நான் ஏற்க மறுத்தற்கு குமார் தான் காரணம். ஆனால் நீ என் மேல் வைத்திருந்த அளவு கடந்த அன்பினால் என் மனம் உன்னை ஒரு கணம் மெளனமாக விரும்பியது என்னவோ உண்மைதான்,

ஆனால் குமாரை மனத்தில் கொண்டு என்னால் உன்னை ஏற்க முடியவில்லை. குமார் நானும் உன்னை காதலிக்கிறேன் என்று தவறாக புரிந்து கொண்டு எனக்கு தற்கொலை செய்து கொண்டான். அதற்கு நீதான் காரணம் என்று உன்னை பழி வாங்க துடித்தேன். அதற்காக தக்க சமயம் பார்த்து கொண்டிருந்தேன். அச்சமயம் தான் நீ என்னை பெண் பார்க்க வந்தாய். இதை விட நல்ல சமயம் இல்லை என்று கல்யாண நாடகம் ஆடினேன், முதலிரவில் முடித்தேன், தற்கொலை என மாற்றினேன். இதுதான் நடந்தது” என்றாள் வனித்தா.

ரஞ்சித் பதிவு செய்யும் கருவியின் விசையை அடைத்தான்.

“ஆஹ்ஹ... என சிரித்தான் ரஞ்சித்.
“இப்போழுது நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன். அந்த முட்டாள் குமார் நீ என்னை தான் காதலிக்கிறாய் என நினைத்து தற்கொலை எல்லாம் செய்து கொள்ள வில்லை, என் முகம் போல் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டு என்னை தீட்டு கட்டி விட்டு குமார் இறந்துவிட்டதாக நம்ப வைத்து விட்டு உனக்கு ரஞ்சித்தாக உன்னை அடைவதுதான் அவனின் நோக்கம். ஏனென்றால் நீ ரஞ்சித்தை தான் காதலிக்கிறாய் என தவறாக எண்ணி. திருமணமும் செய்தான்.

உன்னை காதலித்து ஏமார்ந்த நான் தோல்வியால் மனம் உடைந்து அரை பைத்தியம் ஆன போதுதான் என்னை இரு முறை குமார் கொலை செய்யும் நோக்கில் என்னை தாக்கி இருக்கிறான். தக்க சமயம் சிகிச்சை அளித்த மருத்துவர் நான் இறந்து விட்டதாக குமாரிடம் பொய் சொல்லி ஏதோ ஒரு உரு தெரியாத பிணத்தை கொடுத்து சமாளித்திருக்கிறார்.

மருத்துவரின் ரகசிய சிகிச்சை எடுத்த நான் மெல்ல குணம் அடைந்து உளவு துறையில் பணியாற்றினேன். உன்னை பழிவாங்கவும் என் மனம் துடித்தது. அப்பொழுதுதான் முதலிரவில் ஆடவன் தற்கொலை என்று என் புகைப்படத்தோடு செய்தி வெளியானது. அதை கண்ட நான் காவல் அதிகாரியின் மூலம் இந்த கேஸை மீண்டும் திறந்தேன், கொலை என நிருபித்தேன்.

“உன்னை நான் பழி வாங்கத்தான் நினைத்தேன், ஆனால் அதற்கு வேலையில்லை இப்பொழுது. நான் உனக்கு செய்ய நினைத்ததை கோர்ட் பார்த்து கொள்ளும், நான் குமாருக்கு செய்ய நினைத்தை நீயே செய்து விட்டாய், கேஸ் க்ளோஸ்” என்று கை தட்டி கொண்டே வெளியேறினான் ரஞ்சித். வனித்தா கதறி கதறி அழுதாள்.

எழுதியவர் : பவநி (23-Jun-17, 1:45 pm)
Tanglish : kopam
பார்வை : 590

மேலே