அடித்தளத்தைப் பலமானதாக அமைத்திடுங்கள்

கணவனுக்கும், மனைவிக்கும் பணமென்னும் வெற்றுக்காகிதமே பெரியதாகத் தெரிகிறது தாம் பெற்றெடுத்த பிள்ளைகளை விட...

வாடகைத் தாயிடம் வளர்ப்பிலே வளர்கிறது, குழந்தை...

கதை சொல்ல தாத்தா, பாட்டியும் இருப்பதில்லை வீட்டில்...

இனிமையான சொற்கள் கேட்க,
அன்பின் அரவணைப்புக்கு ஏங்க,
பிஞ்சு நெஞ்சில் வேதனையின் தாண்டவம் ஆடுகிறது...

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாதென்பது போல் ஐந்து வயதுவரை போதிக்கப்படும் அறிவே நல்ல மனிதனாக்குகிறது குழந்தையை...

பெற்றோரின் லட்சியம் குழந்தைகளின் லட்சியமாகிறது, இயந்திர மனிதனை உருவாக்கிய அறிவியலாளரின் லட்சியத்திற்கேற்ப செயல்படும் இயந்திர மனிதன் போல...

தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பழக்கவழக்கங்கள்,
மனதில் வேரூன்றிய வெறித்தனங்கள்,
மூடநம்பிக்கை,
அதிகாரம், பதிவியைச் சொத்தாகக் கருதும் நிலை,
கண் ஆரோக்கியமாக மூடிய நிலையிருந்து இருந்துவிட்டு, கண் கெட்டுப் போனபின் சூரியநமஷ்காரம் செய்தல் போலே,
ஆறு நிறைய வெள்ளம் பொங்கிவரும் வேளையிலே அணைகட்ட முயற்சிப்பதைப் போல,
கெடுதிகளிலே முற்றிவிட்ட நிலையில் நற்பண்புகளை விதைக்க எண்ணுதலும் இயலாதே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (23-Jun-17, 6:04 pm)
பார்வை : 770

மேலே