கவியரசர் கண்ணதாசனின் 90வது பிறந்தநாள் சிறப்புப் பதிவு2

கவியரசரைப்பற்றி நமக்குத் தெரிந்தது,முடிந்ததுவரை சொல்லிவிட்டோம் .
கொஞ்சம் அந்தப்பக்கமா போவோமெனத் திரும்பினால் மனிதர்.
அத்திக்கா...போகிறாய்.? என்று இந்தப் பாட்டென்னும் சாட்டைகொண்டடித்துத் திருப்புகிறார் என்னை. என்ன செய்ய?

குசும்பும், கோமாளித்தனமும் நிறைந்த காதலர்கள் அவர்கள். அவர்களுக்கு கல்யாணமும் நடந்து முதலிரவு இப்போ தொடங்கவிருக்கும் நேரத்தில். பொய்யாய் கோபத்தோடு நாணிக்கொண்டு அவனும்,அவளும். நகைச்சுவையாய் பாடுவதுபோல்தான் .
என பாடலுக்கான சூழல் கவிஞரிடம் சொல்லப்படுகிறது.
அப்பக் கதை என்னப்பா.? என்று இயக்குநரைக் கேட்க.
"அண்ணே கதைக்கு வேறு பாட்டு எழுதுங்க இந்தப் பாடலை காதல்கொண்ட தம்பதிகளுக்காக சொல்லுங்க " என்றதும். வெளியே சென்று புகைத்துவிட்டு துண்டை சுண்டி எறிந்துவிட்டு வந்து கொட்டினார் இப்பாடலைஅத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே!
இத்திக்கிக்காய் காயாதே
என்னைப் போல் பெண்ணல்லவோ.!

என்று அவளைப்போல் வானத்தில் காய்ந்துகொண்டிருக்கும் நிலவிடம் அவள் சொல்ல .
அதே சொற்களால் பல்லவியை தொடங்கிய அவன்

"என்னுயிரும் நீயல்லவோ "

என்று சொல்லிப் பல்லவி நிறைவுறும்.
சரணத்தில் அவள்.

கன்னிக்காய் ஆசைக்காய்
காதல்கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ?
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ.?
என
அத்தம்பதியினர் முதல் சரணத்தை முடிக்க இரண்டாம் சரணத்தில் பெண் தொடர்வாள்.

ஏலக்காய் வாசனைபோல்
எங்கள் உள்ளம் வாழக்காய்
சாதிக்காய் பெட்டகம் போல்
தனிமையில் உள்ளம் கனியக்காய்
என்றதும் கணவன் சொல்வான்

சொன்னதெல்லாம் விளங்காயோ?
தூதுவளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ? எனப்பாட
அவள் தொடர்வாள்

உள்ளமெல்லாம் மிளகாயோ?
ஒவ்வொரு பேச்சும் சுரைக்காயோ?
வெள்ளறிக்காய் பிளந்ததுபோல்
வெண்ணிலவே நீ சிரிக்காயோ.! என்றதும் அவள்.

கோதையெனைக் காயாதே
கொத்தவரங்காய் வெண்ணிலவே..

அவள் சொன்னதும்
இருவரையும் காயாதே
தனிமையிலேகாய் வெண்ணிலா..!
என
அவர்கள் இருவரும்
சேர்ந்து பாட பாடலும் முடிவுறும்.

சரி பாடலை மட்டும் சொன்னாயே என்ன விளக்கம்? எனக் கேட்போர் எண்ணிக்கை குறைவாகத்தான் இருப்பீர்கள்.
சிலருக்காக ஒருவரியை மட்டும் சொல்லலாம்.
அத்திக்காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே.
அத் திக்காய் : அத் திசையில் ஒளி வீசும்
ஆலங்காய் வெண்ணிலவே : கசப்பு நிறைந்த ஆலங்காயைப் போன்ற நிலவே.
இப்படி
ஒவ்வொரு சொல்லுக்கும் சிலேடையாய்
இரு பொருள் வரும்படி முழுப்பாடலையும் எழுதியிருப்பார் அப்பச்சி.

இப்போதும் ரெட்டை அர்த்தத்தில் பாடல் எழுதப்படுகிறது!!!

கவியரசரின் கவித்துவமான
இருபொருள் சிலேடைத் திறனுக்கு இப்பாடல் சான்று.
ஒவ்வொரு சொல்லுக்குமான விளக்கத்தை விளங்கிக்கொண்டு நான் வியந்த வியப்பு அப்பப்பா..!
அனைத்தையும் சொல்ல வேண்டுமா என்ன?
வாஞ்சையுடன் உங்கள்
வளநாடன்.



மங்கை எந்தன் கோவைக்காய்.
என்றதும்.

மாதுளம் காய் ஆனாலும்
என்னுளம் காயாகுமோ.?
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ.?
என்ற அவன் சொல்ல.

உருவங்காய்

எழுதியவர் : (24-Jun-17, 5:01 am)
பார்வை : 71

மேலே