கிறுக்கியின் கிறுக்கல்கள் - 07

என் உயிர் வரை தீண்டும்
உன் விழிகளின் ஒளிவீச்சில்
ஒளிந்திருக்கிறது
என் முகப்பூச்சு..!

********************************************************
அணு அணுவாய் என்னை
அரித்துக்கொண்டிருக்கிறது
உன் நினைவுக்கரையான்கள்..!

********************************************************
உன் விழி பேசும்
மொழியிசை மட்டும்
என் உதிரத்தை உரசிவிட்டு
வந்தமர்ந்துகொள்கிறது
என் உதடுகளில்
உதட்டுச்சாயமாய்..!

********************************************************
நீ வந்து போன பாதையில்
இன்னமும் நின்றுகொண்டுதானிருக்கிறது..!
மைல்கல்லாய் என் மனது..!

********************************************************

நீ அணு அணுவாய் ரசித்து
மெதுமெதுவாய் ருசித்து புசித்திடும்
ஓர் கவிதையாகும்
வரம் வேண்டுமெனக்கு..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (24-Jun-17, 11:09 am)
பார்வை : 254

மேலே