மூங்கிலிலே காற்றசைக்கும் காற்றலை --- புதுக்கவிதை

மூங்கிலிலே காற்றசைக்கும் காற்றலை --- புதுக்கவிதை


ஆசையுடன் நெஞ்சிரண்டு சேர்கின்ற நேரம்
ஆடாத சிலைகளும் நாட்டியம் ஆட
மூங்கில் காற்றினில் முழுவதும் இசைத்த ராகம்
அதுவே காதல் கீதமாய் .... !

ஆடலுக்கு ஆண்மைக்கு ஊதுகின்ற குழலிசை
ஆதாரமான கானம் ஊடலைத் தெளிவித்து
உற்சாகம் மூட்டிட உண்மைக்காதல் கூடலில் முடிய
வண்டுகள் உலவுகின்ற மலர்ச்சோலை !


மயக்கங்கள் தரும் வேளையில் கண்ணெதிரே நிற்கின்ற
பிம்பத்தைக் காளை நான் காண விழிமகள் என்னைக் கொன்று விட
மா மயிலாய் நர்த்தனம் ஆடியது நெஞ்சம் .


மதி மயக்கம் கொண்டு இதயவாசல் திறக்க
எண்ணச்சிதறல்கள் அசைந்தாட இமயச் சிகரமாய்ச் செவிகளில்
மூங்கிலின் நாதம் நுழைய அதிகத் துணிவாய்
இன்பம் கரைபுரள கன்னத்தில் காயம் அந்தக் காரிகை செய்தாளோ மாயம் !
கள்ளமில்லா என்னிதய வானில் காற்றினில் ராகங்கள்
மூங்கிலிலே காற்றசைக்கும் காற்றலையாய் !


ஆக்கம் :- கவிச்சிற்பி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (24-Jun-17, 7:53 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 64

மேலே