இணைபிரியாக் காதல்

காதலால் பிணிக்கப்பட்ட இருள்ளங்களின் பெற்றோர், ஏடெடுத்து நிலைக்குமாவென்றறிய கணியனிடமாலோசிக்க,
ஏடுகளையெடுத்து கணித்த கணியனோ, " இவர்கள் சேர்ந்தால் இருவரில் ஒருவர் மாய்வது நிகழும். சேர்ந்துவாழ பொருத்தமில்லை. ", என்று சூழ்ந்துரைக்க,
தங்களின் பிள்ளைகளின் வாழ்வு இவ்வாறு இருண்டு போகக் கூடாதென்றெண்ணிய பெற்றோரும் கணியன் சோற்களுக்கு ஒத்தூத,
காதல் கொண்ட அவ்விரு உள்ளங்களைப் பிரித்துவைக்க,
வேவ்வேறு வரன்களைத் தேடியலைய,
பிரிதலொப்பாத,
காதல் கொண்ட அவ்விருள்ளங்களும் சேர்ந்துவாழவே தலைப்பட்டு வீட்டைவிட்டே வெளியேறி, பெற்றோரையும், உறவினரையும், சொத்துகளையும் துறந்து யாருமில்லா,
சோடிகிளிகளாய்,
தங்கள் சிறகைவிரித்து பறக்க, அதற்கொப்பாத சமுதாயம் கழுகாய் மாறி காதலுள்ளங்களிரண்டையும் வாழவிடாமல் சிதைக்க, யார்யாரோ வந்து தொல்லை கொடுக்க, வருத்தங்கொண்ட காதலுள்ளங்களிரண்டும் தங்கள் பூலோக வாழ்வை முடித்துக் கொண்டு, அமைதியான ஆனந்த உலகம் செல்லவே ஏங்க, அவ்வெளையிலே கொந்தளிக்கும் கடலலை, " என்னிடம் வாருங்கள். ",என இருவரையும் அழைக்க,
இருவரும் கடலை நெருங்க, கடலலை வந்து ஆரத்தழுவிக் கொண்டு சென்று, சிறிது நேரங்கழித்து கரையில் உமிழ்ந்தது இரு உயிரற்ற சடலங்களை...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (25-Jun-17, 5:42 am)
பார்வை : 736

மேலே