கண்ட நாள் முதலாய்-பகுதி-12

.........கண்ட நாள் முதலாய்........

பகுதி : 12

"ஹலோ" அர்ஜீன் சொல்லுடா,எப்படி இருக்காய்??அமெரிக்கா போனதில இருந்து ஆளை பிடிக்கவே முடியல...நீ போன வேலை எல்லாம் எப்படி போய்கிட்டிருக்கு??எப்போ ஊருக்கு வாறாய்??என்று கேள்வி மேல் கேள்விகளாய் கேட்டு அர்ஜீனை வறுத்தெடுத்துவிட்டான் அரவிந்..

அர்ஜீன் அரவிந்தனின் அப்பா சங்கரனின் சொந்த தம்பி ஐங்கரனின் மகன்...சங்கரனும் ஐங்கரனும் எவ்வளவு ஒற்றுமையோ அதை விட அர்ஜீனும் அரவிந்தும் கூடப்பிறக்காவிட்டாலும் இரட்டையர்கள் போல் ஒட்டித்திரிபவர்கள்...பாசத்தில் அவர்களது அப்பாக்களையே மிஞ்சியவர்கள்...அர்ஜீன் அரவிந்தை விட இரண்டு வயது இளையவன்...அதனாலேயே அண்ணன் தம்பி என்ற பாசத்தை விட நல்ல நட்பு அவர்களுக்கிடையே இருந்தது...

"டேய்..டேய்... கொஞ்சமாவது இடைவெளி விட்டுக் கேளுடா...இப்படி மூச்சே விடாம கேள்விகளாய் கேட்டுட்டே போறாய்??என் விசயம் இருக்கட்டும்...அங்க என்னவோ காதல் கதை ஒன்னு போய்க்கிட்டு இருக்கிறதா கேள்விப்பட்டேனே...அத முதல்ல சொல்லுங்க சேர்??ஆனாலும் ரொம்ப சந்தோசமாய் இருக்குடா...எங்க நீ கல்யாணமே பண்ணிக்காம இப்படியே இருந்திடுவியோனு நினைச்சன்...உன் கல்யாண செய்தி கேட்டதும் அவ்வளவு சந்தோசமாய் இருந்திச்சி...இப்பவாவது என் ரூட்டை கிளியர் பண்ணனும்னு தோனிச்சே உனக்கு,அதுவரைக்கும் மிக்க மகிழ்ச்சிடா அரவிந்...

"என்னடா அமெரிக்காவில யாரையாவது பார்த்திட்டியா...அப்படி ஏதுமிருந்தா சொல்லுடா...இரண்டு பேரோட கல்யாணத்தையும் ஒன்னாவே நடத்திரலாம்..."

"நமக்கு அமெரிக்காகாரி எல்லாம் வேண்டாமடா அரவிந்....நம்மூர்க்காரிதான் ஐயாக்கு வேணும்"....இதைச் சொல்லும் போதே அர்ஜீன் மனதில் துளசியின் முகம் வந்து சென்றது...அன்று கடற்கரையில் வைத்து துளசியைப் பார்த்தது தான்...அதன் பின் தனது கம்பனி சார்பான பிரொஜெக்ட் ஒன்றினை பிரசென்ட் பண்ணுவதற்காக அமெரிக்கா வந்துவிட்டான்....அவன் மட்டும் தான் அங்கு வந்திருந்தானே தவிர...அவனது மனம் முழுதும் அந்தக் கடற்கரையையே சுற்றிக் கொண்டிருந்தது..துளசியின் நினைவிலேயே முழ்கியவனை அரவிந்தனின் குரல் தட்டி எழுப்பியது...

"என்னடா...சத்தத்தையே காணோம்,கல்யாணம் என்டதும் டூயட் பாடக் கிளம்பிட்டாய் போல.."

"நான் எல்லாம் கனவில டூயட் பாட மாட்டேன்டா....எல்லாம் நிஜத்தில தான்..."

"என்னமோ நடக்குது....நீ நடத்து...நடத்து...சரி எப்போ ஊருக்கு வாறாய்....கல்யாண வேலை எல்லாம் நீ தான் முன்னாடி நின்னு செய்யனும்...."

"இதெல்லாம் நீ சொல்லனுமாடா....அதெல்லாம் ஒரு கலக்கு கலக்கிடலாம்....முதல்ல உன் இரும்பு இருதயத்தை கொள்ளையடிச்சவங்களை பார்க்கனும்...."

"ஹா....ஹா....அதுக்கென்ன இப்போவே போட்டோ அனுப்புறன்....பார்த்திட்டு சொல்லு.."

"அதெல்லாம் வேண்டாம்....நான் நேர்ல வந்துதான் அண்ணியைப் பார்ப்பேன்...இன்னும் இரண்டு நாளில நான் வந்த வேலை முடிஞ்சிடும்டா...அதுக்கப்புறம் உடனே பறந்து வந்திடுறன்...சரி டா.....நான் இப்போ ஒரு மீட்டிங்குக்கு கிளம்பனும்..உன் கூட அப்புறமா பேசுறன்...பாய் டா...டேக் கெயார்..."

"ஓகே டா பாய்.."

அர்ஜீனோடு கதைத்து முடித்ததும் அப்பாவைத் தேடி அவரது அறைக்குள் நுழைந்தவனுக்கு முதலில் கேட்டது சங்கரனின் குதூகலமான குரல்தான்...அவர் பேசியதை வைத்தே துளசியின் அப்பாவோடு தான் கதைக்கிறார் என்பதை ஊகித்துக் கொண்டவன்,அவர் வரும் வரை அவருக்காக அறையின் வெளியே சென்று காத்திருக்கத் தொடங்கினான்...அவனை ரொம்ப நேரம் காத்திருக்க வைக்காமல் தொலைபேசி அழைப்பை முடித்துக் கொண்டு வந்தார் சங்கரன்...

"என்னப்பா,ரொம்ப நேரம் காக்க வைச்சிட்டனா??உன்னோட கல்யாண விசயமாத்தான் யோகனோட பேசிட்டிருந்தேன்...உன் அம்மா எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரமா கல்யாணத்தை நடத்தனும்னு சொல்லிட்டா...இன்னும் பத்து நாளில நல்ல முகூர்த்தம் வருதாம்...அதுக்குள்ள எல்லா சம்பிரதாயங்களையும் முடிச்சிடலாம்...யோகன் முதல்ல கொஞ்சம் தயங்கினான்...ஆனா எல்லாத்தையும் நாம சேர்ந்து பண்ணிடலாம்னு சொன்னேன்...ஓரளவுக்கு சமாதானமாகிட்டான்....நீ என்னப்பா சொல்லுற??"

அவன் இன்று கல்யாணம் என்றால் கூட சரி என்று தலையாட்டிவிடுவான்....பத்து நாள் எப்படி காத்திருப்பது என மனம் சண்டை போட்டாலும் இவ்வளவு சீக்கிரமாய் அனைத்தும் நடப்பதே போதும் என்று எண்ணியவன்,"எனக்கு டபுள் ஓகே பா...நானே இதைப்பத்தி தான் உங்ககிட்ட பேசலாம்னு வந்தேன்....நாமளே எல்லா வேலையையும் பண்ணிடலாம் பா...அர்ஜீனும் இன்னும் இரண்டு நாளில வந்திடுவானாம்...எல்லாம் ஒரு குறையுமில்லாம பண்ணிடலாம்..."அப்புறம் இன்னொரு விசயம் பா??"என்று இழுத்தவன் சற்றுத் தயங்கி நின்றான்...

"என்னப்பா,எதுவாயிருந்தாலும் தயங்காம சொல்லு..?"

"இல்லை பா...துளசி சம்மதம் சொல்லிட்டாள்னு தெரியும்,ஆனாலும் நான் ஒருதடவை அவகிட்ட நேரடியாவே கேட்டுத் தெரிஞ்சுகிட்டா என் மனசுக்கு இன்னும் நிம்மதியா இருக்கும்...அவளோட முழு சம்மதம் இல்லாம இந்த கல்யாணம் நடக்கக்கூடாது பா.."

"நிச்சயமா அவளோட சம்மதம் இல்லைனா இந்தளவு தூரம் வந்திருக்காது...உன் மன ஆறுதலுக்கு வேணும்னா அவ வீட்டு நம்பர் தாறன் போன் பண்ணி கதைச்சுக்கோ...இப்போ நீ தனியா போய் பார்த்திட்டு வந்தா அவ்வளவு நல்லா இருக்காது பா....பொண்ணு பார்க்கிற சடங்கு எல்லாம் உனக்குப் பிடிக்காது என்டதால தான்...அந்த மாதிரி எதுவும் ஏற்பாடு பண்ணல..வாற வெள்ளிக்கிழமை கல்யாணத்துக்கு ஐந்து நாள் முன்னாடி நம்ம ஊர்க் கோயிலுக்கு போறோம்...அன்னைக்கு அவங்களும் குடும்பத்தோட வருவாங்க நீ கேட்க வேண்டியதை அங்க வைச்சு கேட்டுக்கோ பா..."

அவர் சொல்வதும் சரியென்று படவே துளசியின் வீட்டு நம்பரை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டவன் அவனது அறைக்குள் சென்று துளசியின் வீட்டு இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டான்...

இங்கே யோகேஸ்வரனோ இன்னும் பத்து நாளில் எப்படி எல்லாவற்றையும் பார்ப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார்....சங்கரன் எல்லாவற்றையும் தான் பார்த்துக் கொள்வதாக சொல்லியிருந்தாலும் அவர் செய்ய வேண்டியதை அவர் செய்துதானே ஆக வேண்டும்....கலைவாணிக்கும் எல்லாம் சீக்கிரமாக நடப்பது ஒருபக்கம் சந்தோசமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் கவலையாகவும் இருந்தது....என்னதான் எல்லாப் பெண்களும் ஓர் நாள் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டிற்கு செல்ல வேண்டுமென்றாலும்,பெத்த மனம் மகளை உடனடியாக பிரிவதென்றால் கவலை கொள்ளவே செய்யும்....அந்தக் கவலை கலைவாணியை வாட்டினாலும்...தன் மகளிற்கு கிடைத்த நல்வாழ்க்கையை எண்ணி மனதை தேற்றிக் கொண்டவர் அடுத்து நடக்க வேண்டிய வேலைகளில் கவனத்தை திருப்பினார்...

அரவிந்தனின் தொலைபேசி அழைப்பினை முதலில் எடுத்தது யோகேஸ்வரன் தான்...அறிமுகப்படலம் சுகநல விசாரிப்புக்களை ஒருவருக்கொருவர் முடித்துக் கொண்டவர்கள்...அரவிந் துளசியிடம் பேச வேண்டுமென்று சொன்னதும் அறைக்குள் சென்று துளசியிடம் போனைக் கொடுத்துவிட்டுச் சென்றார் யோகேஸ்வரன்...

அவர் கொண்டுவந்து போனைத் தந்ததும் அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை....அதையே கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தவள்,அரவிந்தனின் "ஹலோ துளசி.."என்ற அழைப்பில் போனை எடுத்து காதிற்குள் வைத்தாள்....


தொடரும்...

எழுதியவர் : அன்புடன் சகி (25-Jun-17, 6:56 am)
பார்வை : 727

மேலே