உடையாத நீர்க்குமிழி

முதல் வ‌ரியில் முகம் இருக்கும்
இறுதி வரியில் உயிர் இருக்கும்
இடை இடையே வரும் வரிகள்
உருவம் ஒன்றைச் சுமந்திருக்கும்

சமூகத்தின் முகத்திரையை கிழித்திடவே சில முயலும்
இயற்கை பக்கம் இன்பமாக சில தாவும்
அகதிகளில் வலி சொல்ல அடுத்தவரி வந்துவிழும்
சாதிமத பிரச்சனைகள் சார்ந்துபல வரிகள் வரும்

நட்பின்வலி காதல்வலி குடும்பவலி பல சுமக்கும்
கற்பின் மொழியின் கலாச்சாரம் பண்பாட்டின் பக்கம்கூட‌
எழுத எழுத மூளைக்குள்ளே சிந்தனைகள் எழுச்சிபெரும்
அத்தனையும் விட்டிடாமல் பிடித்துவைப்பான் கவிஞனவன்

நமக்கான கற்பனைதான் உடையாத நீர்க்குமிழி
உடையுமுன்னே அத்தனையும் எழுத்தாக ஆகிவிட‌
இடைவிடாத சிந்தனையில் உதித்துவந்த தெல்லாமே
நன்றியுடன் நமைவணங்கும் நிம்மதி பெருமூச்சுவிடும்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (25-Jun-17, 9:00 am)
பார்வை : 74

மேலே