ஹைக்கூ சென்றியு லிமரைக்கூ வகைமைகள்

ஊரெங்கும் ஒரே நறுமணம்
தீப்பிடித்து எரிகிறது
ஊதுவத்தி நிறுவனம்
************************
பாம்புகள் நிறைந்த குளம்.
பயமில்லாமல் நீந்துகிறது
எழில்சிந்தும் நிலா.

*****************
சலனமில்லாத தடாகம்.
மலர்ந்திருக்கும் தாமரை.
சிக்கலான வேர்கள்.
*********************
குஞ்சுகளை விழிக்கச் செய்தது.
கூடுவந்த தாய் வாயில்
கீச்சிட்டக் கோழிக்குஞ்சு.
********************
பைத்தியத்திற்கு மருந்து
ஆராய்ச்சி செய்தார்.
ஆராய்ச்சி பைத்தியமானார்.
*********************
முகத்தழகு தோலில் ஆள் மிடுக்கு.
முறுவலில் மின்னிடும்
அகத்தழகு வாலில் தேள் கொடுக்கு
***********************
ஈழத்தில் நடந்தது இன படுகொலை.
மறுத்த அரசு கட்டியெழுப்பியது
தமிழர் நிலங்களில் புத்தர் சிலை.
*************************
குடியிருப்புகள் யாவும் சுத்தம்.
இயல்பு நிலையை புரட்டிப்போட்டது
குடியேறியிருந்த யுத்தம்.
************************
மீள் குடியேற்றத் திட்டம்.
பாதுகாப்பு வளையம் விட்டு
ஆள் வெளியேற சட்டம்.

****************************
.*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (25-Jun-17, 3:57 pm)
பார்வை : 76

மேலே