விளம்பர மோகம்

எங்கு இருந்து ஈடாகுது இது...........

உச்சி முதல் பாதம் வரை
ஒவ்வொன்றிக்கும் விளம்பரம் தான்

இனிப்பாகட்டும்
ஒன்றின் விலை ஒரு ரூபாய் கூட இல்லை .....
அதற்கு லட்சத்தில் விளம்பரமா ????

வீட்டில் செய்யும் குளிர்பானம் அதை வெளியில் வாங்குவது
தான் பெருமை என்று எண்ணவும் வைத்து விட்டனர்

எழுதி கொண்டுஇருக்கும் இந்தத்தாளிலும் அவ்வப்போது ஏதோ
வண்ணங்கள் ஓ... விளம்பர மோகம் இங்குமா

ஆணுறைக்கு கூட அனைவரும் இருக்கும் இடத்தில் விளம்பரம்
தேவைதானா??? குழந்தையிடம் என்ன சொல்லி புரியவைக்க ???

நாம் பிடித்ததை வாங்குவதைவிட
அவர்கள் பிடிக்க வைத்து வழங்கி விடுகின்றனர்

விலங்கல்ல நாமும் மானிடராய் மாறிவிட்டோம்
பலநாள் முன்பே ---- பகுத்தறிவை மறந்து ..............

முள்ளை எடுப்பது முள்தான்
போட்டதை எடுப்பதும் நம்மில்தான் ..............

பலகோடியில் அவன் விளம்பரம் ....
அவன் விளம்பரமும் உன் பணம்தான்

விளம்பரம் மறந்து விலையை குறைத்தாலும்
மறந்து போகுது மக்களின் மனதில் இருந்து .....

மறந்துவிட்ட பகுத்தறிவை தட்டி
எழுப்பு மனிதனாய் மாறி

விளம்பரமோகம் மறந்து விழித்திடு

முக பூச்சு இதில் முக்கியமானது மஞ்சள்
அதை மறைத்து விற்பதுதான் தந்திரம்

தந்திரத்தில் மழுங்கிவிடாதே .................
பாத்திரம் அறிந்து பிச்சை இடு,,,,,,,,,,,,,,,,,

எழுதியவர் : வான்மதி கோபால் (26-Jun-17, 4:38 pm)
Tanglish : vilampara mogam
பார்வை : 1120

மேலே