பிறப்பில்லா இனியநிலை பெற்றோம் எங்கள்உயிரின் மரணவாயிலில்

நீங்க ரொம்ப நல்லவர் ...
நான் தான் உங்களுக்கு சின்ன சின்ன தொல்ல அப்பப்ப குடுத்திட்டு இருக்கன் ...
என்னோட தொல்லைய எல்லாம் சந்தோசமா ஏத்துக்கிறீங்க ...

உங்களுக்கு நன்றி சொல்ல இந்த காலம் பத்தாது ...
என் குறும்புகளை என்னை விட அதிகம் நேசிக்கிறாயே...

என்னடி அப்படி பாக்கற ...

நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ...

ஹா ஹா ...
நீயும் தானடி

ஹா ஹா அப்டியா , நேத்தென்னவோ போடி கருவாச்சினு சொன்ன மாதிரி இருந்துது ...

அழகு என்பது நிறத்தில் இல்லையே ...

அது சரி ...

இப்படியே சிரிச்சிட்டே இருடி ...எப்பயும் ...

பின்ன உங்ககூட இருக்கனே எப்படியும் சிரிச்சிகிட்டு தானே இருப்பேன் ...

சரிங்க மேடம் ...

ஹா ஹா ...

அங்க பாருங்க சார் ...நம்ம கல்யாண போட்டோ , என்ன இளிப்பு ...அந்த சிரிப்பு இப்பொழுதும் இருக்கிறதா ...

ரொம்பவே இருக்கு ...

ஹா ஹா ...நான் ஏதும் கொடுமைப்படுத்தலையோ ?

இல்லவே இல்லை ...நான் என்ன நினைப்பனோ
அதையே நீ செய்வ தெரியுமா !
நீ என் தாய்மடி ...
அந்த மரம் , அந்த மலை , அந்த கடல் , அந்த வானம் , இந்த இசை யாவும் நீயடி ...


கவித கவித ...

தாய் மடி என்று சொன்னவுடன் நினைவுக்கு வருகிறது ...
நான் உங்களை நேசிக்கும் அளவிற்கு உங்கள் தாயையும் நேசிக்கிறேன் ...
அவர்கள் இல்லாமல் நீங்கள் ஏது ?...

தெரியுமடி ...
தாய் இல்லாமல் உயிர் ஏது ?

ம்ம் ... நான் சென்று காப்பி கொண்டு வருகிறேன் ...

ம்ம் .. சரி ..

என் செல்ல மாமா , என் கண்ணே பட்டுடும்.. சுத்தி போட்டுக்கோங்க ...

ஹா ஹா ...உத படுவ , ஓடிடு ...

ஹா ஹா ...
கீழே சமையல் அறை நோக்கி சிரித்து கொண்டே இறங்குகிறாள்...
நானும் அவளை பார்த்து சிரித்துக் கொண்டே இருக்கிறேன் ...

என்னங்க ... என்ற அவளின் குரலுடன் ...கீழே பாத்திரங்கள் விழும் சத்தம் ...

என்னடி , இதோ வருகிறேன் ...

உள்ளே நுழையும் போது தரையில் விழுந்துகிடந்திருந்தாள் ...

பிரபா ... பிரபா .....

மடியில் தூக்கி அணைத்துக் கொண்டேன் ...
பிரபா ...என்னடி செய்கிறது ...
நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேங்க ... உங்கள் மடியில் தானே இருக்கிறேன் ...
சரி டி
உடம்புக்கு என்ன செய்கிறது ...
மயக்கம் வருதுங்க ...
என்ன இது கடவுளே இப்படி தூக்கி வாரி போடுகிறதே ...
கையை கோர்த்துக் கொண்டேன் ...
உனக்கு ஒன்னும் ஆக விடமாட்டேனடி...
என் கையை அவள் பிடித்து நான் உன்னை விட்டு பிரிய மாட்டேன் மாமா .....என்கிறாள் ,
அவள் நெற்றியில் முத்தமிட்டு உன்ன தவிக்க விடமாட்டேன்டி ...
என் மடியில் தூங்குகிறாள் ...
அவள் மார்பில் சரிந்து அவளுடனே நானும் கைகோர்த்து மெய்க்கோர்த்து தூங்குகிறேன் ...
இனி எங்களை யாராலும் எழுப்ப முடியாது ...

அவள் சொன்னது காதில் ஒலிக்கிறது ...
நாம் ஒன்றாகவே பசியாறுவோம்
அடங்குவோம்
இளைப்பாறுவோம் ...
ஆம் அவள் சொன்னது நடக்கிறது ...ஒன்றாகவே அடங்கினோம் ...அடக்கமும் ஆகிறோம் ...
அவள் என்னை பார்த்து எப்பொழுதும் போல் சிரிக்கிறாள் ...அவளுக்கு இந்த இடம் மிகவும் பிடித்திருக்கு ...எனக்கும் தான் ...
அவளும் நானும் மட்டுமே இருக்கும் இடம் ...
இங்கே புன்னகை மட்டுமே பூகம்பம் கிடையாது ...
வருடல் மட்டுமே வஞ்சகம் கிடையாது ...
மொத்தத்தில் இது இரு உயிர்கள் மட்டும் வாழும் ஓர் உலகம் ...
மனிதன் என்ற பெயருக்கு சம்மந்தம் இல்லா மிருகம் இங்கே கிடையாது ...
இங்கே இருப்பதெல்லாம்
ரம்மியமான மலை
அதில் அழகான அருவி
அங்கே அதிசயமான காடு ...அதில் குயிலும் மயிலும் கிளியும் அணிலும் மானும் முயலும் அன்னமும் இரு அன்றிலும் அவளும் நானும் ...
காட்டில் பூவும் கனியும் பார்க்க கண்கள் இரண்டு பத்தாது ...அதில் பட்டாம்பூச்சிகளின் நடனம் ...அதை பார்த்துக்கொண்டே என் பட்டாம்பூச்சியை ஓடி கட்டி பிடித்து சுற்றுகிறேன் நானும் ...
பின்னால் இருந்து என்னை கட்டி அணைத்து முத்தமிடுகிறான்(ள்) என்னவளும் ...
நான் பிடிக்கையில் அவளும் சிரித்து நடக்கிறாள் ...

மரணத்தின் வாயில் எப்படி இருக்கும் என்று நாங்கள் சேர்ந்து கண்ட கனவு அப்படியே இருக்கிறது ...
அவளும் நானும் ஒரே நேரத்தில் இறந்து ஒன்றாகவே புதைந்து ஒன்றாகவே எழுந்து வாழ்வோம் என்பதை அன்றே அவர் கை பிடித்த அன்றே உணர்ந்திருந்தேன் , அவள் கையை என்றும் விடமாட்டேன் என்பதை நான் உணர்வேன் ... அன்றில்கள் ...எங்களை பார்க்கின்றது நாமோ என்று..

மீண்டும் பிறவா நிலை அடைந்து இயற்கை அன்னையின் மடியில் அவர் மடியில் நான் கிடக்க என் மார்பில் அவர் கிடக்கிறார் ...
மரங்கள் பூக்களை எங்கள் மீது தூவி ஆசிர்வதிக்கிறது ...பச்சை பசும்புல்லில் அவரை ஆடையாக்கி போர்த்திக்கொண்டு படுத்திருக்கிறேன் ...
கண்ணும் கண்ணும் நோக்கிக் கொள்ள மீண்டும் மீண்டும் புன்னகைக்கிறோம் பூக்களோடு
~ உங்களுக்காக உங்கள் மனைவி எழுதும் உயிரின் மடல்
பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (27-Jun-17, 10:40 am)
பார்வை : 108

மேலே