மறு ஜென்மம்

நம்ப மறுக்குது !
நாத்திகம் பேசுது !
நர பலியும் இங்கே ;
நடுவீதியில் நடக்குது !

"மாண்டு போனவன் மக்கியேபோவான்" -
நாத்திகன் !
"மாண்டவன் யாவரும் மரமாய் எழுவான்" -
ஆத்திகன் !

"மகனே, இது நிரந்தரம் அல்ல ;
உனக்கென்று ஓர் உலகம் காத்திருக்கு :
அதில் நீ உல்லாசமாய் வாழலாம்" -
நம்ப மறுத்த கரு !

"செய்யும் செயலுக்கேற்ற கூலி -
சேருமிடத்திலே"!
நம்ப மறுக்கும் உலகமிது :
வாழும் காலம் மட்டுமே -
கண்ணில் தெரியுது !

இறந்தவன் வாழ்கிறான் -
மறு ஜென்மத்திலே !
இருப்பவனோ தேடுகிறான் -
இணையத்திலே !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (27-Jun-17, 11:02 am)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 144

மேலே