அழகி

நான் பார்க்கும் போது
பார்க்காமல் பார்த்துச் செல்லும்
கண்கள் அழகு
கம்பிரமாய் நிமிர்ந்தாலும்
இந்த கன்னியவனை கண்டதும்
கட்டை விரலை நோக்கும்
பார்வையும் அழகானது
ஓரமாய் நின்ற என்னை
ஒற்றைக்கண்ணால் இரசிக்கும்
உன் இரசிப்பும் அழகுதான்
இந்த கள்வனைக் கண்டதும்
அடக்கமுடியாமல்
அடக்கி சிரிக்கும்
குட்டியூன்டு சிரிப்பும் அழகுதான்
சந்தோஷத்தில் பொங்கி
சிலிர்க்கும் முகமும் அழகுதான்
என்னருகில் மௌனத்துடன்
முனுமுனுங்கும் மென்மையான
வார்த்தையும் அழகுதான்
அது கூடவே நடனமாடும்
இதழும்(உதடு) அழகானது
இந்த கள்வனை கவர்வதற்க்கு
கலர்கலராய் இட்டிருக்கும்
பொட்டும் அழகானது
அதை சுமந்து கொண்டிருக்கும்
சிறு நெற்றியும் அழகானது
என் கவிதைகளைக் கேட்டுக்கொண்டிருக்கும்
உன் காதும் அழகானது
அந்த காதிற்க்கு அழகு சேர்க்கும்
அவள் காதணியும் அழகானது
கருமை பூசிக்கொண்டிருக்கும்
புருவமும் அழகானது
அந்த புருவத்திற்க்கு கீழே
கண்களை பாதுகாக்கும்
இமையும் அழகானது
காற்றும் இரசித்து செல்லும்
உன் கூந்தலும் ஆழகானது
அந்த கூந்தலின் மேல்
படர்ந்திருக்கும் மலர்களும் அழகானது
சின்ன சிரிப்பில்
சித்தரிக்கும் பற்கள் அழகானது
நீ பார்ப்பதை நான் பார்த்தால்
வெளியே வரும் நாக்கும் அழகானது
முட்களிலிருந்து காக்கும்
காலணியும் அழகானது
அந்த காலணிகள்
பளபளப்பை சேமிக்கும்
பாதமும் அழகானது
உன்நடையும் அழகானது
அவற்றிற்க்கு உதவும் கால்களும் அழகானது
உன் உடையும் அழகானது
அது கொண்ட மேனியும் அழகானது.

ஆனால்
உன்னை மட்டுமே காதலிக்கும்
என் ஜீவன்
அழகானது அற்புதமானது ஆழமானது.....

எழுதியவர் : சக்திவேல் (27-Jun-17, 12:04 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
Tanglish : azhagi
பார்வை : 70

மேலே