பால்கனி

பால்கனி
மே மாத கோடை வெயில் மேகத்தை கரைத்து கோடை மழையாக பொழிந்தது கொண்டிருந்தது.இதமான அந்த மழையை தன் வீட்டு பால்கனியிலிருந்து ரசித்துக் கொண்டிருந்தான் சபரி.சிறு வயதிலிருந்தே மழையின் மீது மோகம் கொண்ட அவனின் மனைவி சித்ராவிற்கு மழையே ஆகாது.இதுத் தெரிந்திருந்தும் வீட்டிற்குளிருந்த மனைவியை கொத்தாக அள்ளிவர திட்டமிட்டவனாய் உள்ளே சென்றான்.
"சித்ரா.....?"ஒரு வித ஏக்கம் படர அழைத்தான்.
"இதோ வரேன் சார்,ஒரு நிமிஷம்"என பாத்ரூமிலிருந்து குளித்து வியர்த்த உடலை வெளிரிய சிவப்பு நிற நைட்டிக்குள் நுழைத்தவாறு வந்தாள்.
வந்தவளை மாரோடு அணைத்துக் கொண்டு வெளியே இழுத்துச் சென்றான். சில நிமிட திமிறலுக்குப் பின் பால்கனியில் மழைச்சாரல் படுமாறு நின்றான்.நீர்க் கத்திகள் அவர்களின் முகம்,கழுத்து,மார்பு,இடை,தொடை என வழிந்து கொண்டு மொசைக் தரைக்கு பிரயாணப்பட்டது.
"டேய்,பொறுக்கி இப்ப தான்டா குளிச்சுட்டு வரேன்,அப்பறம் ஏன்டா மழையில நனைய வெக்குற,டாக்" பொய்யான கோபத்தை அவன் மீது தெளித்தாள்.
"மை டியர் பொண்டாட்டி மழையில குளிக்க குடுத்து வச்சுறுக்கனும்"குறு குறுப்பாக அவளின் உடலை மேய்ந்து கொண்டே கூறினான்.அதற்கு மேல் சித்ரா பேசியது போல தெரியவில்லை.அவளின் ஆடையைப் போன்று அவள் முகம் சிவந்தது.
மழை நீரின் வேகத்தில் அவள் போட்டிருந்த தற்காலிக கொண்டை அவிழ்ந்து பாதி முகத்தை மறைத்தது.சபரி அவள் கூந்தலில் கை பதித்து வருடி விலக்கினான்.தூரத்திலிருந்த அவனின் முகத்தை அவளின் முகத்தோரம் கொண்டு சென்றான்.வெட்கத்தில் அவளின் ஈச்சம்பழ உதடுகள் நடுங்கின.கண்கள் இமைகளுக்குப் பின் ஒழிந்து கொண்டன.நாசி வேக வேகமாக மூச்சிரைத்தது.மார்புகள் விரிந்து விரிந்து சுருங்கின.கைகள் அவளின் ஆடையை கிழிக்குமளவிற்கு இறுக்கமாக பற்றின.
"சித்ரா? கண்ணை தொறயேன்" .
மெதுவாக இமைகளைப் பிரித்தாள்.கரு வண்டுக் கண்கள் அவனை ஏறிட்டன.
அவளின் கண்களை பார்த்துக் கொண்டே அவளை தூக்கினான்.ஒரே நேர்கோட்டில் அவளின் கண்களும், அவனின் கண்களும்.உடலை இறுக்கமாகப் பற்றியதில் கொஞ்சம் மூச்சுவிட சிரமப் பட்டாள்.இருந்தாலும் அவன் பிடறியைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தாள். சவரம் செய்த கன்னத்தில் இதழைப் பதித்தாள்.பின் அவளின் உதடுகள் அவனின் கீழுதட்டைக் கவ்வின.மழையில் குளிர்ந்த இருவரின் உடலிலும் வெப்பம் பரவியது.
"சித்ரா...? சித்ரா?,உனக்கு ஒன்னுமில்லை.ப்ளீஸ் கண்ணைத் தொற" டாக்டர் வனிதாவின் குரல் அவளின் காதில் பட மெதுவாகக் கண்களைத் திறந்தாள் சித்ரா.சித்ராவின் கண்கள் சபரியின் முகத்தைத் தேடியது.ஆனால் அவளின் கண்களில் தெரிந்தது சுருக்கம் விழுந்த முகத்துடன் அருகில் நின்ற டாக்டர் வனிதா மட்டுமே.
அவளின் தேடல் புரிந்த வனிதா "அன்னைக்கு நடந்த விபத்துல சபரி இறந்துட்டாரு மா,உன்னை மட்டுந்தான் காபாத்த முடிஞ்சது" துயரம் தொண்டையில் படர கூறினார்.
சித்ரா அன்று நடந்ததை யோசித்துப் பார்த்தாள்.அவர்களிருவரும் உடல்களில் வெப்பம் இடமாற்றம் செய்து கொண்டிருந்த போது திடீரென தீ பற்றியது.பற்றிய தீ பரவியப் பின் தான் கவனித்தனர்.உடனே சபரி வீட்டிற்குள் நுழைந்து தீயை அணைக்க முற்பட்டான். நேரம் செல்ல செல்ல தீ தான் அவனை அணைத்தது.அதீத புகை மூட்டத்தின் காரணமாக மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரை விட்டான்.அவனைத் தொடர்ந்து சித்ராவும் மயங்கினாள்.
இந்த நிகழ்ச்சிகளை நினைக்கும் போதே சித்ரா அழ ஆரம்பித்தாள்.
"அழாதேம்மா,உனக்கு நாங்க இருக்கோம்,தைரியமா இரு"வனிதா வரண்ட குரலில் கூறினார்.
"..........."
மேலும் தொடர்ந்தார்,"உன்னைய சபரி தனியா விட்டுட்டு போல,உனக்கு துணையா அவரோட வாரிச விட்டுட்டு பொயிருக்காரு,ஸோ நீ தைரியமா இரு".
சித்ரா தன் வயிற்றில் கை வைத்தாள். கண்களை மூடி "இதுக்காக தான வெயிட் பண்ணோம், ஆனா நீ பொய்டல"என நினைத்துக் கொண்டாள்.மூடிய இமைகளை பிளந்து கொண்டு கண்ணீர் அவளின் கன்னங்களில் வழிந்தது மழைச் சாரல் போல.

எழுதியவர் : சங்கேஷ் (28-Jun-17, 12:18 am)
பார்வை : 539

மேலே