வெள்ளிநிலா முளைக்கையிலே

வெள்ளிநிலா முளைக்கையிலே
பெற்றமனம் வாடுதய்யா
எங்கப்பிள்ளை பக்கமில்லை
இரண்டு ஜீவன் ஏங்குதம்மா (வெள்ளிநிலா முளைக்கையிலே)

பாசம்அன்பு அடகுவைத்து
கல்விச்செல்வம் கொடுத்தோமையா
கல்விபெற்ற ஞானப்பிள்ளை
கடல் கடந்து போனதம்மா (வெள்ளிநிலா முளைக்கையிலே)

சேர்த்துவைத்த பாசமெல்லாம்
செல்லாத ஐநூறாய் போனதையா
தேக்கிவைத்த நெஞ்சமெல்லாம்
சுக்குநூறாய் உடைந்ததையா (வெள்ளிநிலா முளைக்கையிலே)

காசு பணம் வந்தபோதும்
கொஞ்சிக்குலாவ யாருமில்லை
சொந்தபந்தமென வளர்ந்த உள்ளம்
தன்னந்தனியாய் வாடுதம்மா (வெள்ளிநிலா முளைக்கையிலே)

பரம்பரையாய் உழைத்த கழனியும்
கைவிட்டுத்தான் போனதையா
குலைகுலையாய் காய்த்த தெங்கும்
பட்டமரமாய் சாய்ந்ததம்மா (வெள்ளிநிலா முளைக்கையிலே)

யாரிடம் சொல்வேன் இந்தக்கதையை
எல்லோர் வீட்டிலும் இந்தக்காதிதான்
மணிக்கணக்காய் பார்த்தமுகம்
நொந்து நூலாய் போனதம்மா (வெள்ளிநிலா முளைக்கையிலே)

கீழ்வானம் சிவக்கையிலே
கண்ணிரண்டும் பூத்ததம்மா
இராப்பகலாய் துடித்தஉள்ளம்
வெள்ளிநிலவுக்கு ஏங்குதம்மா (வெள்ளிநிலா முளைக்கையிலே)

வெள்ளிநிலா முளைக்கையிலே
பெற்றமனம் வாடுதய்யா
எங்க ஜீவன் பக்கமில்லை
இரண்டு பிள்ளை ஏங்குதம்மா

இதனைபாடலாகக்கேட்க இந்த youtube இணையதளம் பாருங்கள்
https://youtu.be/um5MAygJTjE

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (28-Jun-17, 7:26 am)
பார்வை : 109

மேலே