நிலவே நீ ஒரு பெண்ணாகி மண்ணிற்கு வாராயோ

நிலவே, வெண்ணிலவே
நித்தம் நித்தம்
வான் மண்டலத்தில் மட்டும்
உலாவிவரும் நீ -எனக்காக
ஒருமுறை உன் பூரண அழகோடு
பௌர்ணமி முழு மதியாய்
மின்னும் தாரகைகளாம் உன்
குழாம் சூழ விண்ணை விட்டு
மண்ணிற்கு வாராயோ நான்
தேடும் குமரி நிலவாய் -காத்திருப்பேன்
மண்ணில் காவிரி நதிக்கரை ஓரம்,
உனக்காக, என் தங்கநிலவே ,
வந்து உன் காதலனாய் என்னை ஏற்றுக் கொள்வாய்
பின்னர் இருவரும் மட்டும் காதலராய்
கைகோர்த்து நதி மணலில் உலாவி வருவோம்
காதல் கீதங்கள் இசைத்து ஆடி வருவோம்
விண்ணின் தேவதைகளும் அதைக் கண்டு
அசூயைக் கொள்ள ; ஆம் நிலவே நீ ஓர்
தேவதை அல்லவா உனக்கு காதலியாய்
விண்ணில் வந்து உலவுவது சாத்தியமே
நான் அறிவேன் - வாராய் என் நிலவே
நீ ஒரு பெண்ணாகி அந்த ரம்பை, ஊர்வசிபோல்
என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு
விண்ணை மீண்டும் அடைந்திடுவாய்
பால்நிலவாய் காய்ந்திடுவாய்
மண்ணில் காதலர்கள் உள்ளம் குளிரவைக்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Jun-17, 12:27 pm)
பார்வை : 96

மேலே