நட்பே நிரந்தரம்

அங்கு ஏற்றம் இல்லை இறக்கம் இல்லை
உயர்வும் இல்லை தாழ்வும் இல்லை
சுயநலம் இல்லை சூழ்நிலைப் பிரிவும் இல்லை
இருப்பிலும் நிற்கும் இல்லாமையிலும்
தோழனோடு விலகாது உடன் நிற்கும் நட்பு
நலவிலும் கெடும்பிலும் ஒன்றாயிருக்கும்
மனம் அங்கு நன்றாயிருக்கும்

காலாவதியாகாமல் கனிந்தே கிடக்கும் பழத் தோட்டம்
மனங்களில் கலந்த உணர்விலே மிதந்த உறவுத் தேட்டம்
பாசத்தில் இணைந்து அன்பிலே பிணைந்து
கிடக்கும் இனிமைத் தோட்டம் உணர்வின் நீட்டம்

அன்பில் இணைவைது நட்பு கவலையை அணைப்பது நட்பு
விலகாது தோளோடு தோள் நிற்கும் நேசத் துணை அது தான் நட்பு

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (28-Jun-17, 2:54 pm)
Tanglish : natpe nirantharam
பார்வை : 1108

மேலே