நான் ரொம்ப கோபக்காரனுங்க

அப்பா, அம்மா சொன்னாங்க,
சின்ன வயசிலிருந்தே நான் கோபக்காரனுங்க..

பிடித்தது வேணும்னு மிகப் பிடிவாதம் கொண்டவனுங்க.

எனக்கே தெரியாதுங்க,
நான் அப்படியா இருந்தேன்னு...
இருக்கேன்னுங்க...

இரண்டு வயது இருக்கும்ங்க..
பாட்டி திட்டிக்கொண்டே கூட்டிட்டு போனாங்க...
கோபம் ரொம்ப வந்திட்டதுங்க.

பாட்டி காதில் போட்டிருந்த தந்தட்டியைப் பிடிச்சு இழுத்துட்டேன்னுங்க.
கையோட வந்திட்டதுங்க...

பாட்டி மருத்துவமனைக்கு போய் காதை சரிபண்ணிட்டு வந்தாங்க...
அப்புறம் பாட்டி என்னைத் திட்டுறதே இல்லைங்க..

கோபம் வந்தா யாரும் சமதானம் செய்ய முடியாதுங்க.
சாப்பிட மாட்டேங்க..

மூக்கைத் தூக்கி மூஞ்சி மேல வச்சுக்கொண்டு நெருப்பாய் மூச்சுக் காயக் கண்ணை உருட்டி முழிப்பேன்னுங்க...

ஆச்சர்யமா இருக்குதுங்க.
நானா அப்படி இருந்தேனுங்க...
இருக்கேனுங்க...

எனக்கேதும் தெரியாதுங்க...

இப்போதெல்லாம் நான் கோபமே படுறது இல்லைங்க...
எல்லாம் காலம் வரைந்த கோலமுங்க...
அக்காவின் அன்பு மட்டுமே நினைவிலிருக்குதுங்க.
மற்றதெல்லாம் மங்கிவிட்டதுங்க...

அப்பா, அம்மா சொல்லுறாங்க,
சின்ன வயசில் நான் ரொம்ப கோபக்காரனுங்க...
உண்மையானு பார்க்க திரும்பிப் போக முடியுமாங்க???...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (28-Jun-17, 4:20 pm)
பார்வை : 1295

மேலே