ஆணிடம் நிலவின் கவி அஞ்சல்

வாகை தலையில் சூட
வஞ்சி தலையை தேடுமோ? நிலவின்
நிர்வாக காந்த காதல்
அவன் புருவம் இரண்டும் பூச்சாண்டி
எனக்கு பிடிக்கும் பூவை
என் தலையில் வைப்பாண்டி
நான் தேடும் காதல் கள்வன்
வேடமிடா காவின்கண் கரைப்பாண்டி
இரண்டு கருநாகம் _அது
நடுவாக ஓர் எல்லை கோடு
இருபுறம் இரு வாளோடு
ராஜாங்க மீசை என்றும் உன்னோடு
கள்வன் கூட்டம் கருத்தேட
காவல் பட்டம் நீ பெற
இரு கள்வன் களவாட கலைந்திடுமோ
ராஜன் வேடம் ?
அம்மாவாசை பௌர்ணமி இரண்டும்
இரண்டடி கண்ணாக உன்னுள்
கண்ணம் காட்டும் கண்ணாடி
உன் இதழ் ரெண்டும் என் முன்னாடி
காட்டு தேனாக தேகம் வந்து நிற்குதடாஅ?
தேகம் பெருத்து
உரிமை கேட்டு _நிலவே
உன் முகம் பார்க்க
காதல் தேடி அலையுதடா ?
உனக்கான நிழலை தேட
நிலவு நிழலோடு
நிர்வாணமாகி உடை மறைத்து
மறைத்து வந்து தேடி தேடி
தொலையுதாடா...? ஒவ்வரு நாளும்
நிலமகனே காதல் செய்வாயோ....?

எழுதியவர் : கருணாசபா ரெத்தினம் .மு (29-Jun-17, 1:38 am)
பார்வை : 145

மேலே