வாழ்க்கைப் பயணம் - அனுபவச்சாரல்கள் 30

( நீண்ட இடைவெளிக்குப்பின் இந்த கட்டுரையை தொடர்ந்திட வேண்டும் என்று நினைத்தேன் . முன்னரே ஆந்த விருப்பம் இருந்தும் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டுக் கொண்டே வந்தது . ஏதோ இன்று முதல் உங்கள் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன் இந்த கட்டுரை தொடர் மூலம் )

என்னதான் காலமாற்றமும் நடைமுறை மாற்றமும் மிக வேகமாக மாய் வந்தாலும் இதயம் உள்ளவரை நினைவுகள் என்னும் நிழல்கள் நெஞ்சை விட்டு அகல்வதில்லை .... மாற்றுகருத்து இருக்காது என்றே நம்புகிறேன் . வேண்டுமென்றால் சில மறந்து போகலாம் ...நினைவலைகள் உள்ளத்தில் ஓயாது ...கடலலைகளைப் போல ....

நினைவுகள் என்பதே நம்முடைய அனுபவங்களின் சேமிப்புதானே . நடந்தவையும் கடந்தவையும் மிதக்கின்ற இதயக்கடலின் அலைகள் தானே ....அவற்றை மீண்டும் நெஞ்சில் கொணர்ந்து கோர்வைபடுத்தி எழுதுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம் .

முடிந்தவரை முயற்சித்து கடலில் சென்று மீன்களைப் பிடிக்கும் மீனவனாய் வலைவீசி பார்க்கிறேன் . சிக்கியதை சிதறாமல் இங்கே கொட்டிவிடுகிறேன் .

மீண்டும் சந்திக்கிறேன்

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (29-Jun-17, 12:27 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 1932

சிறந்த கட்டுரைகள்

மேலே