ஒருபக்க காதல்கதை பாகம்-29

எங்கோ அலைந்து திரிந்த சோகமுமாய், எதிர்காலத்தை தேடிய அலைச்சலுமாய் அவன் வீட்டினுள் நுழைந்தது அம்மாவிற்கு அப்பட்டமாகத் தெரிந்தது
அம்மா: போய் குளிச்சிட்டு வா, சாப்பிடலாம்
அவன்: வேணாம்(என கூறிக்கொண்டே தன் அறைநோக்கி நடந்தான்)
அம்மா: சரி, பாலாவது...
அவன்: எதுவும் வேணாம்(சற்று குரலழுத்தி)
அம்மா: அவ வந்துட்டு போனா..
அவன்: அவளா..எதுக்கு..எப்போ..?
அம்மா: முதல்ல உன் வயிறு நெறையனும், அப்புறம் தான் உன் மூளைக்கு பதில் சொல்லுவேன்..
அவன்: விளையாட இதுநேரம் இல்ல சொல்லுமா
அம்மா: (ஏதும் பேசாமல் சமையலறையினுள் சென்று சப்பாத்திகளை எடுத்து சாப்பிட ஆயத்தமானாள்)
அவன்: நீ இன்னும் சாப்பிடலையா?..இன்னும் குழந்தையாவே இருகாதமா..இங்க நான்தான் உன் பைய்யன்..
அம்மா: அப்போ வந்து சாப்டு..
அவன்: சரி..இப்போ என்ன நடந்துதுன்னு சொல்றியா..
அம்மா: அப்ப கூட சரிமா சாபிட்றேன்ன்னு வாயில வருதா பாரு,
அவன்: (அவளிடமிருந்து சப்பாத்தியை பிடுங்கி வேகமாய் சாப்பிட்டான்)
அம்மா: உனக்கு அவள எப்படி தெரியும்?
அவன்: ஒரு காபி ஷாப்ல பாத்தேன்..
அம்மா: அவ நெறைய சட்டு..சட்டுன்னு சொல்லிட்டு போயிட்டா..எனக்கு தான் அத ஜீரணிக்க நேரம் எடுகும்ன்னு நெனைக்றேன்..
அவன்: அவ என்ன சொன்னான்னு சொன்னா...உன் அஜீரணத்த சரிபன்னுவேன்
அம்மா: ரொம்ப நல்ல பொண்ணு டா..அவளோட கருப்பைய்ய தானமா கொடுக்கபோறாலாம்...யாருக்கும் இந்த தைரியம் வரும் சொல்லு..இந்த மாறி பொண்ணுங்க நெறைய பேர் இருந்தா..மலடிங்கற வார்த்தையே மறந்திடலாம்..இவ தான் என்ன பொருத்தவரைக்கும் அன்னை தெரேசா, கன்னிகாஸ்திரி.. எல்லாம்..அவ உனக்கு பிரின்டா கெடைக்க நீ குடுத்து வெச்சிருக்கணும்
அவன்: (கடைசியில் “பிரின்ட்” அந்த வார்த்தை அவன் பயத்தை போக்கியது)எல்லாம் ஓகே ..சமூகத்துக்கு நீ இப்டி சொல்லலாம்..ஆனா அந்த பொண்ணு வாழ்கைலேந்து யோசிச்சு பாத்தியா?..அவளுக்கு இன்னும் கல்யாணமே ஆகல..அவ வாழ்கை என்னவாகும்ன்னு..கொஞ்சம் கூட....நமக்கு நல்லது நடந்தா சேரி..அதான..காஷ்மீர்ல வீரர்கள்..மலக்குழில மனிதர்கள்..ஜாதி கலவரத்துல அப்பாவி மக்கள்..இவங்க எல்லாரோட உயிருக்கும் அஞ்சு நிமிஷ அஞ்சலிதான் வெலை..
அம்மா: வேறென்ன செய்யனும்னு சொல்ற?..நான் என் வாழ்க்கைதான் வாழமுடியும் ..
அவன்: அவங்களையும் மனிதரா மதிக்கலாமே..ஒரு பெரிய நடிகரோட அல்லது அரசியவாதியோட சாவ நாட்கள் கணக்குல பேசுற நாம..இந்த மனிதர்களோட பேரைக்கூட அடுத்தநாள் மறந்துடறோம்..
அம்மா: எனக்கு நடக்குற வரைக்கும் எதுவும் எனக்கு முக்கியமில்ல
அவன்: சரி..உனக்குன்னே வெச்சிக்கோம்மா..நான் அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க ஒத்துப்பியா?..இல்ல அவ உன்பொன்னா இருந்தா இந்த தானத்துக்கு சம்மதிப்பியா?
அம்மா: (அவள் மனதில் மறைத்ததை முகத்திற்கு நேரே கேட்டவுடன் சற்று யோசித்து ..)

எழுதியவர் : வெங்கடேஷ் நாகராஜன் (30-Jun-17, 7:48 pm)
சேர்த்தது : வெங்கடேஷ்
பார்வை : 289

மேலே