ஞானம் என்றால் என்ன

ஞானம் என்பது அவரவர் அறிவின் தெளிவைக் கொண்டு பெறப்படும் இயற்கை சக்தி...

அறிவு என்பது உள்ளார்ந்த சக்தி...
கல்வி என்பது சிந்தனைக்கு உணவு...
உணவென்றால் இருவகைப்படும் ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமற்ற உணவு என்று...

நம்மில் பலருக்கு ஞானம் பெற முடியும் என்பதில் நம்பிக்கையில்லை,
சிந்திக்கும் திறனானது முடமாகிவிட்டால்...

மனதளவில் இச்சையை அகற்றாமல்,
உடலளவில் துறப்பது என்பது ஒரு வகையான போலி வேடம்...
அது திரைமறைவில் களியாட்டமாடும்...

உயிர்கள் பிறக்கும் போது பண்பட்ட நிலமென்னும் மழலைகளாக இருப்பதால்,
அவர்களுக்கு விதைக்கப்படும் நல்ல விதைகள், அவர்கள் வளர வளர பயிர்களாக வளர்கின்றன.
பல களைகளும் விதைக்கப்பட்டு அவற்றோடே வளர்கின்றன பெற்றோர், உறவினர்கள், மற்றும் நண்பர்கள் வாயிலாக...

இதை உணர்ந்த மனிதன் தன்னுள் வளர்ந்துள்ள களைகளை நீக்கி, நல்ல பயன் தரும் பயிர்களை மேலும் மேலும் வளரச்செய்வதே ஞானத்தின் வழியாகிறது, உலக மக்களின் பசிதீர்க்கும் விவசாயம் போன்று...

ஞானத்தின் நோக்கம் பரிபூரணம் நிலையை நோக்கி செல்வதே...
ஞானத்தின் வழியில் ஆண், பெண் என்றோ சாதி, மதம் என்றோ பாகுபாடில்லை...

சிந்தித்துச் செயலாற்றுங்கள்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (2-Jul-17, 10:06 am)
Tanglish : nanam endraal yenna
பார்வை : 709

மேலே