பல்சர் vs ஸ்கூட்டி

ஓடிய எனது பல்சரின்
சக்கரங்கள் அறியாது தேய்ந்தது
அது மட்டும் அல்ல: அவளால்
என் மனதும்தான் ..
ஒவொரு சிக்னல் சிவப்பு விளக்கும்
தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை
நான் அவளிடம் பேச அதுதான் வாய்ப்பு என ...
முன் செல்லும் வாகனத்தின்
திடீர் பிரேக்குகள் அடித்தால் என்னாகும்
என தெரியாது ; நான் பிரேக் அடித்தால்
அவள் என்னை அடிப்பாள் என ...
நொடி நேர பொழுதில்
நடுநடுவே ஓட்டி சென்றால்
நான் மட்டும் பயந்ததே இல்லை
அவள் பயப்படுவாள் என்று ...
இப்படி தொடர்ந்து சென்றாலும்
பெட்ரோல் தீர்ந்தாலும்
அவள் கோபம் மட்டும் தீரவேயில்லை ..
ஒவொரு முறையும் என்னை பார்த்து பல்சர் கேக்கிறது
உனக்கு அவள் இருக்கிறாள் ;எனக்கு ?
இது மட்டும் அவள் அறிந்திருப்பாள் போல
ஸ்கூட்டி கேட்கிறாள் கோப படாமல் ...

எழுதியவர் : சக்தி சிவா (2-Jul-17, 1:33 pm)
சேர்த்தது : சிவா
பார்வை : 292

மேலே