பிச்சாண்டி

"அந்த சூர ********* மிதிச்சா சரியா இருக்கும் "
கருமம் வீட்டு முன்னாடி இப்படியா மலம் கழிக்கறது . "அப்பா நாற்றம் குடலை புடுங்குது". என்றான் கஜேந்திரன்.

மனிதனின் நாற்றம் தொடங்குகிறது ........இதை முகர பிடிக்காதவர்கள் , என்னோடு பயணிக்காதீர்கள்.

அவன் பெயர் பிச்சாண்டி , மூளை ஒரு பக்கம் அவணுக்கு சிறு பங்கம் விளைவித்தது, அதனால் தான் என்னவோ அவன் ஒரு பித்தன் போல திரிந்தான். இப்படி தெளிந்து திரிந்தவர்கள் தானே சரித்திர தடத்தில் கால்வைத்தவர்கள் . அவன் ஒரு புத்தனையும், ஏசுவையும் பிசைந்து செய்த பித்தன் போல இருப்பான். தண்ணீரை மேனியில் படாமல் தன்னை பாதுகாத்து கொள்ளவான் . அவனிடம் அப்பியிருக்கும் அழுக்கை சுரண்டினால் ஒரு லட்சம் பிள்ளையாரை உருட்டலாம். யாரிடமும் பேசாமல் தனிமையை வேடிக்கை பார்ப்பது அவன் வழக்கம். யாரிடம்மும் பிச்சை வாங்காமல் இருப்பது அவன் ஈகை மரபு . கொடுப்பதை வேண்டாம் என்று சொல்வது அவன் ஆயுள் சிறப்பு.
நேற்று பாக்கியாம்மாள் கொடுத்த பழைய சந்தகை தான் அவன் வயிற்றை பதம் பார்த்துவிட்டது.
அவன் டார்வின் சொல்ல மறந்த இரண்டாவது குழந்தை நிலை . மலத்தை அடக்க முடியாமல் தெருவில் போய்விடுகிறான்.

"சரி விடுங்க பிச்சாண்டி தினமுமா இப்படி பண்றான், என்ன பண்ணி தொலைக்கறது எங்கையாவது போடான்னு விரட்டின போகமாட்டேங்கிறான்" என்றால் கஜேந்திரன் மனைவி தேவகி.
"சரி சரி எனக்கு காட்டுக்கு டைம் ஆச்சு சீக்கிரம் சொத்த கட்டு " என்றான் பதிலுக்கு கஜேந்திரன் .
"எங்க பொய்யுட்டாள் நம்ம 'சூச்சி"' என்று கேட்டுக் கொண்டு வெளியில் வந்து பார்த்தான் கஜேந்திரன் .

ஒரு மருத்துக்கடியில் , தன்னை ஒரு இறகு போல சுருட்டி கொண்டு படுத்திருந்த பிச்சாண்டியை உற்று பார்த்துக்கொண்டிருந்தாள் கஜேந்திரனின் ஒரே மகளான 'சுச்சி' என்ற சுசித்ரா.

'சூச்சி இங்க என்ன பண்ணிட்டு இருக்கே , அவன் ஒரு பூச்சாண்டி அவன் கிட்ட போகக்கூடாதுனு சொல்லிருக்கேன் இல்ல, என்றான் கஜேந்திரன் சற்று கோபமாக.

'இல்லப்பா பார்த்த பாவமா இருக்கு அது தான்.." என்றால் பத்து வயது மகள் சுசித்ரா


அந்த ஊரில் யாரும் பிச்சாண்டியை சீண்டுவது கூட கிடையாது. சுசித்ரா மட்டும் யாருக்கும் தெரியாமல் பிச்சாண்டிக்கு சோறு கொடுப்பது, விளையாடுவது என்று தன்னை பிச்சாண்டியுடன் இணைத்து கொண்டாள்.
ஒரு மெல்லிய முனங்களுடன் ஒரு அரை உயிருடன் போராடும் வெட்டுக்கிளியை போல புரண்டு கொண்டிருந்தான் பிச்சையாண்டி. யாரும் கண்டுகொள்ளாத கண்ணீர் வினாடிக்கு ஒரு முறை தன்னை வடித்துக்கொண்டது . வெயிலின் மூர்க்கம் அவனை சுட்டு விளையாடியது. மண்ணில் புரண்டு புழுவாய் துடித்தான்.

இரண்டு நாள் கழித்து , அவன் ஒரு சிறையில் இருந்து விடுவித்த கைதியை போல சற்று தேறியிருந்தான்

நாட்கள் நகர்ந்தன...

.
இப்படியே மார்க் வாங்குன உன்ன பண்ணி மேய்க்க அண்ணுப்பிடுவேன் " என்று வகுப்பில் குறைவான விழுக்காடு வாங்கிய மகளை திட்டிக்கொண்டிருந்தான் கஜேந்திரன்.

"இன்னி மேலு இவளுக்கு ஓவரா செல்லம் கொடுக்கக்கூடாது " என்றால் தாய் தேவகி.

அழுத்தபடியே ஜன்னலில் இருந்து பிச்சாண்டியை பாவமாக பார்த்துக்கொண்டிருந்தால் சுசித்ரா.

இரவு பொழுதின் காற்று சற்று குளிர்ந்து இருந்தது.
பிச்சாண்டி அவனிடம் இருந்த கிழிந்து போன போர்வையை போத்திகொண்டு, தன் தேகத்தை சூடேற்ற சற்று தெருவில் உலாத்தினான். அவன் சுசித்ராவை தவிர யாரிடமும் பேசுவதில்லை.

ஊர் உறங்கி இருந்தது , அவணுக்கு திடீரென பசி வாட்டி எடுத்தது. இப்படி பல சமயம் நடந்தேறும் , அப்போதெல்லாம் எதுவும் கிடைக்காத நேரத்தில் அங்குள்ள எதாவது நீரை, சமையத்தில் சேற்று நீரை கூட அவன் குடித்ததுண்டு . ஆனால் இன்று அவன் மிகவும் பசித்திருந்தான். ஆனால் அங்கு பல வீடுகளில் இரவு யட்சிக்காக பசித்திருந்தவர்களின் முனகல்கள் கேட்டவுடன் . அவன் பொழுதை மிகப்பெரிய கொடூரமான முறையில் முடித்துக்கொண்டான்.

ஒரு நாள் கஜேந்திரன் மிகவும் சந்தோசமா காணப்பட்டார்.
"இங்க பாருடி நம்ம சூச்சி ரொம்ப நல்ல மார்க் வாங்கியிருக்க ." என்று தன் மனைவியிடம் கூறிக்கொண்டிருந்தான் . அப்போது ஒரு பெரிய சத்தம் கேட்டது

பிச்சாண்டியை பக்கத்து விட்டார்கள் அடித்து கொண்டு இருந்தார்கள்.
அப்போது பிச்சாண்டியின் ஆடைகள் களைந்து தெருவில் விழுந்தன, பிச்சாண்டியை கண்களில் தண்ணீரை விசும்பியபடி ஓடினான். அப்போது சுசித்ரா ஓடி சென்று பிச்சாண்டியை பிடித்துகொண்டாள் , இன்னும் பூமியில் சில 'வெரோனிகா' துளிர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதை பார்த்த கஜேந்திரன் சுசித்ராவை தர தர வென இழுத்தத்துவந்தார்.
அப்போது திடீரென வயற்று வலியால் சுருண்டு விழுந்தார். அவணுக்கு சிறுநீரகம் ஒன்று பழுது அடைந்ததை மருத்துவர்கள் இரண்டு மாதங்களுக்கு முப்பு கூறியது நினைவில் வந்து அமர்ந்தது.

இரெண்டு வாரங்களாக வழியால் அவதி பட்டான் கஜேந்திரன். அவணுக்கு மாற்று சிறுநீரகம் தேவை பட்டத்தையும் அதற்கான செலவை யோசித்து சிலையை விரைத்து போனால் தேவகி.

ஒருநாள் வலி தாங்கமுடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் கஜேந்திரன்.

அப்போது ஒரு சிறுநீரக மருத்துவர் திருமலைசாமி என்பவர் ," அப்பேரஷனுக்கு ரெடி பண்ணுங்க .." என்று தேவகியிடம் கூறினார்.

தேவகி கண்ணீர் மல்க பேசமுடியாமல் நிண்டார்.

"அம்மா லேட் பண்ணாதீங்க ....செலவு அப்பறம் பாத்துக்கலாம்" என்றார் மருத்துவர் திருமலைசாமி .

அறுவை சிகுச்சை முடிந்தது .

"யு ஆர் பெர்பெக்ட்லி ஆல் ரைட் " என்றார் மருத்துவர் திருமலைசாமி.
நான் எப்படி உங்களுக்கு நன்றி சொல்வேன்னு தெரியலை டாக்டர் , என்னக்கு இலவசமா கிட்னி கொடுத்து மருத்துவ செலவையும் ஏத்துக்கிட்டு ... என்று அழ தொடங்கினான் கஜேந்திரன்.
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை இது ஒரு இறைவனின் கட்டளை அதை தான் நான் செய்தேன் என்றார்.

கஜேந்திரனின் அவன் குடும்பத்தாரும் ஊர் திரும்பினர்.

அப்போது ஒரு பெரிய கூட்டம் ஒன்று ஒரு ஆலமரத்தடியில் குடியிருந்தது. அவர்களை ஒதுக்கி பார்த்தபோது ஒரு சவம் ஒன்று தெரிந்தது , அது வேறு யாரும் இல்லை , ஊர் எதிர் பார்த்த பிச்சாண்டி தான்...ஒரு வெள்ளை துணியால் போர்த்த பட்டு மருத்துவமனையில் இருந்து போஸ்ட் மார்ட்டம் முடிந்த நிலையில் புதைப்பதற்க்காக வைக்கப்பட்டிருந்தது.

அவன் அருகில் யாரும் இதுவரை தொடாத தோல்ப்பை இருந்தது .
காற்றுக்கு மெல்ல தன்னை விரித்து ... அதில் இருந்த காகிதங்கள் மெல்ல சிறகு பிடிக்க ஆரம்பித்தது ........ அதில் ஒரு காகிதத்தில் , டாக்டர் .பிச்சை எம் .டி (நெப்ரோலோஜிஸ்ட் )
கோல்ட் மெடலிஸ்ட் .......என்று இருந்தது
இனொரு சில காகிதங்கள் சுசித்ராவிற்கு கற்று கொடுத்த பாட விளக்கங்கள் இருந்தது.....

இப்படி இன்னும் பல காகிதங்கள் என்னவென்று எனக்குக்கூட தெரியாமல் சிறகடித்தன ..........

எழுதியவர் : (5-Jul-17, 4:02 pm)
பார்வை : 330

மேலே