கதிராமங்கலம்

யாருக்கும் தெரியாத மூடி மறைக்கப்பட்ட ஒரு செய்தி
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் மழை பொழிவு குறைவாகவே இருந்தது சென்னையில் அனைத்து ஏரிகளும் நீர் வற்றிக்கொண்டே இருந்தது சென்னையில் நாளுக்கு நாள் குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடியது குடிநீர் தேவையை பூர்த்தி செய்யாவிட்டால் ஆளும் அரசுக்கு அவ பெயர் ஏற்ப்படும் என்று எண்ணி சென்னையில் இருந்து கொஞ்சம் தொலைவில் இருந்த என்றென்றும் வற்றாத நீர் செழிப்பு மிக்க கிராமம் அது அந்த கிராமத்தின் பெயர் நினைவில்லை ஆளும் அரசாங்கம் மிக இரகசியமாக காவல் துறையினரை ஏவி அந்த கிராமத்திலிருந்த ஒட்டு மொத்த விவசாய நிலத்தையும் ஆக்கிரமத்து அங்கு விளைவிக்கப்பட்டிருந்த அனைத்து சோலைகழையும் அழித்து பெரும் ஆழ்துழாயில் இருந்து தண்ணீர் எடுக்கும் ராடசத இயந்திரங்களை நிறுவி அந்த ஒட்டு மொத்த கிராமத்தையே அரசாங்கம் கைப்பற்றி அந்த விவசாயிகளை அவர்களின் நிலத்தை விட்டு விரட்டிவிட்டனர் அப்போதே அந்த கிராமத்தை சேர்ந்த பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் இது அனைத்தும் எந்த ஊடகங்களிலும் செய்தி வராத படி அரசாங்கம் சாதூர்யமாக மறைத்து விட்டது இந்த செய்தியை சில நாள் கழித்து இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் புதியதலைமுறை தொலைக்காட்சியில் சின்ன செய்தியாக வெளியிட்டனர் ,, இந்த அதிர்ச்சி சம்பவம் இன்று தமிழகத்தில் எத்தனை பேருக்கு தெரியும்

கதிராமங்கலமே பற்றி எறிகிறது என்ன செய்து கொண்டிருக்கிறது அரசு

கதிராமங்கலத்தில் இத்தனை பிரச்சனை நடந்தும் கூட எந்த ஊடகமும் பெரிதாக செய்தி வெளியிடவே இல்லை ,

ரஜினி அவர்கள் கதிராமங்கல வாசிகளுக்காக ஒரு குரல் கொடுத்தால் போதும் அரசாங்கமே ஓ என் ஜி சி நிறுவன குழாய்களை அகற்றி விடும் ஆனால் ரஜினி அதை செய்வாரா ,ரஜினியும் மக்களின் பிரதிநிதி தானே அவர் கதிராமங்கல வாசிகளுக்காக ஒரு குரல் கொடுத்தால் அத்துனை பிரச்சனையும் ஒரு மணி நேரத்தில் தீர்ந்து விடும் அதை செய்வாரா அவர், மக்களின் பிரதிநிதியே மக்களுக்காக விவசாயிகளுக்காக குரல் கொடுக்கா விட்டால் இந்த மக்களும் விவசாயிகளும் செத்து தான் போவர் நகரத்தில் சாலையோர வாசிகளின் எண்ணிக்கை அநாதைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும்
முதலில் ரஜினியை குரல் கொடுக்கச் சொல்லி தீவிரமாக போராடுங்கள் கதிராமங்கல கிராமத்திற்க்காக
நான் ரஜினியை வெறுப்பவன் கிடையாது, காது கேளாத இந்த அரசாங்கத்தின் செவிகளில் கத்தி என்ன பயன், ஆதலால் தான் மக்களின் பிரதிநிதியான ரஜினியை குரல் கொடுக்கச் சொன்னேன் அவர் ஒரு குரல் கொடுத்தால் எல்லாப் பிரச்சனை தீர்ந்து விடும் தானே அப்படியெனில் ரஜினியை குரல் கொடுக்கச் சொல்லி போராடுங்கள்

ஒரு விவசாயி தற்கொலை செய்து சாகிறான் என்றால் அது தன் கோலை தனத்தாலோ பயத்தாலோ அல்ல நான் தற்கொலை செய்து கொண்ட பிறகாவது இந்த அரசாங்கம் விவசாயத்தை காக்கும் என்ற நமபிக்கையில் தான் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறான்
இத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டே தான் இருக்கின்றனர் என்ன செய்து கொண்டு இருக்கிறது நமது அரசாங்கம்

மீனவன் எல்லை தானடினால் இருபது கோடி அபராதம் என்ன செய்து கொணடிருக்கிறது நமது அரசு

விவசாயிகள் அகிம்சை வழியில் பலவருடங்களாக போராடி போராடி அரசாங்கத்தின் கேளாத செவிகளில் வீவாததால் பல வருடங்கள் போராடியும் ,கடைசியில் வேறு வழியே இல்லாமல் தானே நிர்வானப் போராட்டம் நடத்தினர்

ஒ என் ஜி சி நிறுவனம் முதல் அனைத்து நிறுவனங்களும் விவசாயத்தையும் விவசாயிகளையும் கொலை செய்து கொண்டே இருக்கிறது அழித்துக்கொண்டே இருக்கிறது இது இபபடியே தொடர்ந்தால்
இனி மறுபடியும் ஓர் நிர்வான போராட்டம் அரங்கேறும்,, இந்த முறை நிர்வான போராட்டத்தில் கலந்து கொள்வது விவசாயிகள் அல்ல விவசாயிகளின் ஏழைகளின வயதுக்கு வந்த மகனும் மகளுமாகத்தான் இருக்கும் நான் இதை தாளா வேதனையோடு தான் கூறுகிறேன்

எழுதியவர் : க.விக்னேஷ் (6-Jul-17, 12:23 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 1053

மேலே