கண்களல்ல•••

எலும்பில்லாமல் தசைகள்
குவித்துப்போட்ட சாணமே
தசையில்லாமல் எலும்புகள்
வெட்டிபோட்ட விறகுகளே

ஒரே முகத்தைப்போல்
இன்னொரு முகம் இல்லை
ஒரே மனதைப்போல்
இன்னொரு மனதில்லை

சிலைகள் உயிரானால்
செதுக்கியவனே கடவுள்
சிர்ப்பி பட்டினியானால்
கடவுள் இருந்தும் கல்லே

உயர்வையும் தாழ்வையும்
கண்களால் கூர்மையாக கவனித்து இரண்டையும் கொட்டி நன்றாக பிசைந்து ஒன்றாக்காத கண்கள் கண்களல்ல புண்கள்

எழுதியவர் : Abraham Vailankanni (6-Jul-17, 6:29 pm)
பார்வை : 120

மேலே