அழகின் தரிசனம்

காலைக் கதிரவன் கோபம் கொண்டு சூடு போடும் வரை தூக்கம்.
விடுமுறை நாட்களென்றால் மாணவர்கள் பலருக்கு இதுவே வழக்கம்..
தேற்கே செல்லும் இரயில் சங்கின் முழக்கம்...
அதைக் கேட்டு நான் நான் எழுவது வழக்கம்...

உங்களுக்காக நான் இன்று பாடவுள்ளேன் கானம்.
அதைக் கேட்டு நீயும் குறைத்துக் கொள் உன் மனதிலுள்ள கேனம்...
பரந்து விரிந்து இருக்கிறது வானம்...
நிலத்தை மட்டும் ஏன் கூறுபோட ஏங்குது உங்கள் மனம்?...

விளையாடலாம் வாழ்வில் விளையாட வேண்டிய நேரம்...
வேலை செய்யலாம் வாழ்வில் வேலை செய்ய வேண்டிய நேரம்...
தூங்கிவிடலாம் வாழ்வில் தூங்க வேண்டிய நேரம்...
எந்நேரமும் களிப்பு என்றால் வாழ்வில் தள்ளப்படுவீர் வாழ்வின் ஓரம்...

பிறரைத் தாக்கும் உரிமை இல்லை...
ஆனால், தற்காத்துக் கொள்ளும் உரிமை உண்டு...

காலை நேர குயிலோசை கேட்டுப் பார்.
அழகு மயில் நடனம் ஆடுவதை பார்.

இயற்கை என்றும் அழியா அழகு..
அதை மிஞ்சிட நினைக்குது மனித செயற்கை அழகு...
அந்நினைப்பிலே மனிதவர்க்கம் தோற்றமளிக்கிறது அருவருக்கத்தக்க அழகாய்...
இயற்கை அழகையும் கண்டு இரசிக்க உள்ளத்தில் வேண்டுமோர் அழகு...
இல்லையெனில் நீங்களென்றும் பெற மாட்டீர் அழகின் தரிசனம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (8-Jul-17, 9:51 am)
Tanglish : azhakin tharisanam
பார்வை : 874

மேலே