உன்னால் விழுகிறேன் வீழ்கிறேன்

சுடிதாரில் வருகிறாய்
சுற்றும் பம்பரமாய்
கிறு கிறு வென சுற்றி
விழுகிறேன் ..வீழ்கிறேன் !

தாவணியில் வருகிறாய்
தண்ணீர் சுழியில் சிக்கிய படகாய்
கிறு கிறு வென சுற்றி
விழுகிறேன் ..வீழ்கிறேன் !

சேலையில் வருகிறாய்
சூறாவளியில் சிக்கியதாய்
கிறு கிறு வென சுற்றி
விழுகிறேன் ..வீழ்கிறேன் !

அருகே வருகிறாய்
சுனாமியாய் சுருட்டி வாரி
உனக்குள் இழுத்து விடுகிறாய் !

உன்னால் விழுகிறேன் ..வீழ்கிறேன் !

எழுதியவர் : முபா (8-Jul-17, 6:21 pm)
பார்வை : 410

மேலே