ஹைக்கூவில் பிறந்தவள் - பெதும்பை

♥இரண்டாம் பருவம்♥

உன் நான்கெழுத்து பெயர் கேட்டு காதில் தேன் சிந்துதடி அதை வாயாற ஜெபித்து என் வாயெல்லாம் மனக்குதடி....

உன் மென் கைகள் தொட்டு செய்த பொம்மைக்கும் உயிர் பிறக்குமடி பின்பு உன் அழகை கண்டு வெட்கி தான் நோகுமடி...

தவழ்ந்து தவழ்ந்து கணுக்காலும் கருக்குதடி அந்த கருப்புதான் உன் மொத்த அழகுக்கும் திருஷ்டியடி...

தத்தி தத்தி நடைபயில கொலுசின் ஒலி தான் மான்ட் ராகமடி அந்த ஜதிக்கு கலைவாணியே வந்து வீணையை மீட்டாளடி...

பள்ளிக்கு சென்று பாடம் படிக்க நீ துடிக்க அந்த பிரிவை கூட தாங்க மனம் மறுக்குதடி ஏனோ உன் முகத்தில் கள்ள சிரிப்படி...

பதிலறியா கேள்விகள் நீ கேட்க அத்தையும் மாமனும் உனை கண்டு பதற அவர்களை எள்ளி நாகையாடுவாயடி அந்த வகையில் நீயோ சனகனின் புதல்வியடி...

வட்ட நிலவில் பின்னிய இரட்டைஜடை குலுங்குதடி விண்மீன் கொண்டு செய்த சந்திர திலகமிட்டு இந்திரனும் ரசிப்பானடி...

ரோஜா மடல்களில் குத்திட்டு போட்ட காதணிக்கு தான் எத்துனை கர்வமடி உன் மூச்சின் காற்று பட்டு தான் மூக்குத்தியும் சிலிர்குதடி...

பட்டாம்பூச்சி சேமித்திட்ட பட்டு பாவடை தான் உனக்கு பொருத்தமடி அதை தழைய தழைய உடுத்தி நடந்து வர பூமியும் தான் ஏங்குதடி...

அளபெடைகள் அளக்க வெண்பாக்கள் வெட்க்கபட பிள்ளைதமிழ் ஒன்று உனக்காக இயற்றினேனடி ஏனோ வார்த்தைகளுக்கு தான் பஞ்சமடி....

நீ பேசும் வார்த்தைகள் கொண்டு புது இலக்கணம் செய்திட்டேனடி அந்த இலக்கண பாக்களில் சேர்ந்திட யாப்பும் தான் துடிக்குதடி...

தூரிகை பிடித்து நீ வரைந்த ஒவியமும் தான் எழுந்து ஆடுதடி உன் கண் கரு மையின் வண்ணம் கொண்டு தீட்ட தான் கேட்குமடி

மானிட உலகத்தில் நீ ஜனித்த காரணம் தான் விளங்குதடி உன் லட்சியத்தீயினில் நானும் கொஞ்சம் வெந்திட அனுமதி கொடுப்பாயோடி அடி என்னவளே ஹைக்கூவில் பிறந்தவளே....

- பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

எழுதியவர் : பிரசன்ன ரணதீரன் புகழேந்த (9-Jul-17, 8:09 pm)
பார்வை : 286

மேலே