காதல்

காதல் என்ற சொல்லுக்கு
கருத்தறிந்து மனதில்
அதை உருவகித்து -அதற்கு
தன கற்பனைக்கு ஏற்ற
அங்க லட்சணங்கள் தந்திட
காதலனுக்கு மனக் கண்முன்
ஒரு காதலியும் -காதலிக்கு
அவள் கண்ணெதிரே ஓர்
காதலனும் புலப்படலாம்
பார்த்தவர் சொல்லும்
அங்க லட்சணங்கள் கொண்டு
போலீஸ். தேடுபவரை கணினி
உதவிகொண்டு படமாக்குவது ஒப்ப ,
இப்படி மனதில் வரித்த காதலர்
நேரில் தேடி, கிடைத்தால் ................
அந்த யோகம் காதல் யோகம் என்பேன்
முயன்று பார்க்க யார்
முன் வருவார் கவிஞன்
இதை நான் முன் வைக்கின்றேன் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Jul-17, 10:53 am)
Tanglish : kaadhal
பார்வை : 183

மேலே