கனவானார் காமராஜர்

இன்பம் பொங்கும்
இந்நாடு இடுகாடாய்
மாறுமென்று இரவோடு இரவாக
துறை அன்று ஓடிவிட்டான்......
இந்நாட்டு மன்னரோ
இடிவந்து விழுந்தாலும் மாக்கள் இருப்பிடம் இழந்தாலும் பொதுவானது வரியென்று பொதி மூட்டை ஏற்றி விட்டான்.....

பொங்கிவரும் இளைஞர் அணி போதுமடா உந்தன் பணி என்று கொடியேந்தி போகையிலே!
கடமைத்தவறா கள்வர்களோ கல் எறிந்து போனதென்ன?
கண்விழித்த
மக்களுக்கோ! இரவிலோர், ஆட்சி என்றானதென்ன?

நீதிக்கோ தண்டனையாம்,
தருபவனோ! நீதிபதியாம்,
உண்மைக்கோ ஊமைவேடம் அளிப்பவனோ அரசியல்வாதியாம், -அவன் ஆளுமுன்னே
கிள்ளி கொடுத்தான்
ஆளுகையில் அள்ளிக்கொண்டான்....


தினக்கூலி திருடிவிட்டால் தீராது விசாரணை.... திருந்தி தான் வாழுகையில் தீர்த்துவிடும் சமூகம் அவனை


கல்விக்கண் திறந்தவரோ
கனவிலும் கண்டதில்லை
கள்வர்க்கும் காலம் வருமென

எழுதியவர் : கல்லறைச்செல்வன் (10-Jul-17, 4:41 pm)
சேர்த்தது : கல்லறை செல்வன்
பார்வை : 311

மேலே