கோடுகளும் கட்டங்களும்

கோடுகள் கட்டங்கள்
வாழ்க்கையில்
ஒரு அங்கம் என நாம்
நினைக்கிறோம்
பிரிவுகளும் பிரச்சனைகளும்
இதனால் வந்தவையே...

ஒன்றாக பிறந்து
ஒன்றாக வளர்ந்து
ஒன்றாக வாழ்ந்தாலும்
இந்த கோடுகளும்
கட்டங்களும்
நம்மை பிரித்துவிடுகின்றன
அண்ணன் தம்பி
உறவுகள்
பகையாளிகளாகவும்
பங்காளிகளாகவும்
மாறிவிடுகின்றன...

ஆறாம் அறிவு என்பது
கோடுகளையும் கட்டங்களையும்
பிரித்து பார்க்க உதவுகிறதே
தவிர உறவுகளை சேர்த்து பார்க்க
உதவவில்லை ஆறாம் அறிவு
வீனாய்போனால் நீ மனிதனா...?

கட்டங்களையும் கோடுகளையும்
எல்லையற்ற பாசத்திலும்
நட்பிலும் புகுத்து விடாதீர்கள்
கோடுகள் அழிந்துபோகும்
கட்டங்கள் கலைந்துபோகும்
எல்லைகள் மாறிப்போகும்
பாசங்களும் நட்பும்
மாறுவதுமில்லை அழிவதுமில்லை...

ஒன்றும் அறியாத
பிஞ்சு உள்ளங்களிலும்
நஞ்சு கலந்து விடுகின்றன
இந்த கோடுகளும் கட்டங்களும்

ஆறுக்கு இரண்டு இந்த
கோடும் கட்டமும் எங்கிருக்கு
இருக்கா இல்லையா என்று
நமக்கு தெரிவதில்லை
ஆனாலும் கோடுக்கும்
கட்டத்துக்கும் அடிமைகளாகிவிட்டோம்...

உலகத்தில் தன் ஆட்சி
கோடுகளை விரிவடைய
செய்தவர்களெல்லாம்
கடைசியில் போகும்
போது எதையும் கொண்டு
செல்லவில்லை
கோடுகள் உடன் வருவதில்லை...

இயற்கை வளங்களுக்கும்
மனிதன் கோடுகளை
போட்டு பிரிவினையை
வளர்த்துள்ளான்
பறவைகளையும்
மிருகங்களையும்
சிறைவைத்த மனிதன்
நதிகளையும் சிறைவைத்து
தன்னலத்தின் உச்சிக்கே
போய் வாழ்கிறான்...

எழுதியவர் : செல்வமுத்து.M (12-Jul-17, 9:58 am)
பார்வை : 160

மேலே