என் காதல் இராக்காரன்

இரவை ரசிக்க இறகைப் போல் பறந்தேன் மாடிக்கு
இரவின் மகன் மடியில் உறங்க
நிலவவன் நிழலில் நின்று கொஞ்சத்தொடங்கினேன்
வெண்மகனே....
உன்னழகை ஊர் ரசிக்க
உனக்கே உரியவளாய் நான் உன்னை ரசித்தேன்.
ரசனையே இல்லாதவள் கூட, ரசிக்கத்தான் தொடங்கியுள்ளாள் இராக்(இரவு)காரன் உன்னை.
நிலவெனப் பெயர் கொண்டு, நில்லாமல் ஓடுபவனே.....
நிஜமாகத்தான் சொல்கிறேன்-நில்லென்று செல்லமாய்........
ஆடவனே.....
வெண்தேகத்தால் வெளிச்சம் தரும் உன்னால்
பெண் தாகம் தணியும்
தண்மையில் தாராளமான உன் ஆண்மைக்கு உலகம் பணியும்.
வீரனே......
உன்னைக் கண்டு ஓடி ஒளியும் பகலவன்
பகைக்கு அஞ்சி மாலை முதல் மலையேரவில்லை.....
உன் பணிநேரம் முடியும் பனிநேரம் வரை பகலவனுக்கு வான்பாதை தெரியவே இல்லை...
அழகனே.......
வெண்மயிலை மிஞ்சிய வெண்மையில்
நீ சிந்திய உண்மையில்
நான் சிதறித்தான் கிடக்கிறேன்,சிறகே இல்லாத பறவையாய்.....
வானிலை அறிக்கை வாசிக்க மறந்து
உன் நிழலிலே வசிக்கத் தொடங்கி
விடியலே வேண்டாமென
விடாப்பிடியாய்க் இருந்த என்னை
விட்டுச்சென்றாயே
விடிந்தவுடன்........

எழுதியவர் : மீனாட்சி (12-Jul-17, 3:48 pm)
பார்வை : 103

மேலே