என் மகள் பேரு மகளாம்

ஏண்டி இளவரசி மொறச்சிட்டு கோவமா இருக்கற?
😊😊😊😊😊😊😊
எல்லாம் என்னோட மகள் பேரால வந்த வினை பாட்டிம்மா.
😊😊😊😊😊
என்னடி ஆச்சு?
😊😊😊😊😊😊
பாட்டிம்மா, நடிகை சிறீதேவி மகள் பேரு ஜான்வி. அந்தப் பேரத்தான் உங்க கொள்ளுப் பேத்திக்கு வச்சோம்.
😊😊😊😊😊😊
ஆமாம். சாணுவி. இப்ப அதுக்கு என்னாச்சு?
😊😊😊😊😊😊😊😊
நான் ஜான்வி-ங்கற பேருக்கு என்ன அர்த்தம்னு தெரியாமலே எங் கணவர் பேச்சையும் மீறி எம் பொண்ணுக்கு பேரு வச்சிட்டேன். அவ படிக்கற வகுப்பில ஒரு இந்திக்காரப் பையன் இருக்கறானாம். அவன் 'ஜான்வி' -ன்னா 'மகள்' -ன்னு அர்த்தம்னு சொன்னானாம். அதிலிருந்து அவ வகுப்பில படிக்கற பசங்க பொண்ணுங்க எல்லாம் அவளை 'மகள், மகள்' -ன்னு கூப்படறாங்களாம்.
😊😊😊😊😊
அந்த இந்திக்காரப் பையன் ஒரு நல்ல காரியத்தாண்டி பண்ணிருக்கறாண்டி இளவரசி. இந்திக்காரங்க பொண்ணுங்களுக்கு 'மகள்' -ன்னு பேரு வைக்கறபோது நீ மட்டும் ஏண்டி எம் பேத்திக்கு 'சாணுவி'- ன்னு இந்திப் பேர வச்ச? சிலர் 'திருமகள்', 'கலைமகள்' -ன்னெல்லாம் பேரு வைக்கறாங்க. நீ தான் சினிமா மோகத்திலே எம் பேத்திக்கு 'சாணுவி' -ன்னு இந்திப்பேர வச்சுட்டே.
😊😊😊😊😊😊😊😊
நாஞ் செஞ்ச தப்பு இப்பத்தான் எனக்கு புரியுதுங்க பாட்டிம்மா. எம் மகள் பேர 'திருமகள்' -ன்னு மாத்திடறேன்.
😊😊😊😊😊
ஏண்டி எம் பேத்தி பொறந்த போதே நல்ல தமிழ்ப் பேரா வைக்கச்சொல்லி உன்னோட வீட்டுக்காரன் சொன்னான். நீ தான் அவம் பேச்சை கேக்கல. சரி, சரி. எம் பேத்தி பேர 'திருமகள்' -ன்னே மாத்திடு. ரண்டாம் வகுப்பு படிச்ச எனக்கு இருக்கற தாய் மொழிப் பற்று பட்டதாரியான உனக்கு இல்லையே.
😊😊😊😊😊
ரொம்ப நன்றிங்க பாட்டிம்மா. தாய்க்கு நிகர் நம்ம தாய் மொழிங்கற உண்மையை இப்ப நான் உணர்ந்திட்டேன் பாட்டிம்மா.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Janvi=daughter
indiachildnamecom.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிரிக்க அல்ல. சிந்திக்க. தமிழுணர்வை தட்டி எழுப்ப.

எழுதியவர் : மலர் (12-Jul-17, 6:53 pm)
பார்வை : 309

மேலே