என் உத்தரவு இல்லாமல்

நானாகவும் கீழே விழவில்லை
நான் கெட்டியாக பிடித்திருக்கும்
நம்பிக்கையும் என்னை
விழ விடவில்லை

விஷமங்கள் விழவைப்பதாய்
எண்ணி விழுந்தது விஷமிகளே

அவர்களோ அழுது கொண்டார்
நானோ பிழைத்துக் கோண்டேன்

இன்னலெனும் விஷத்தோடு
பழகியவன் நான்
இந்த விஷமங்கள் என்ன
செய்துவிடும்
என் உத்தரவு இல்லாமல்
சொல்லுங்களேன்

எழுதியவர் : Abraham Vailankanni (13-Jul-17, 9:23 pm)
Tanglish : en utharavu illamal
பார்வை : 84

மேலே