யுகங்கள் காட்டும் நட்பு

யுகங்கள் மாறி மாறி வந்தாலும்
நட்பின் தன்மை மாறுவதில்லை
க்ரித யுகத்தில் ஸ்ரீ ராமன் -குகன் நட்பு
ஸ்ரீராமன்-சுக்ரீவன் நட்பு
துவாபர யுகத்தில்
கண்ணபரமாத்மா-குசேலன்,
துரியோதனன்-கர்ணன் நட்பு,
கலியுகத்தில் கம்பன்-சடையப்பன் நட்பு
என்று நட்பின் பெருத்தகைகளைப் பற்றி
படித்தோமானால் ஒன்று தெளிவு
அதுதான் இந்த நட்பின் நண்பர்கள்
தம்மையே தந்திட தயங்கமாட்டார்
கண்ணன் ஒரு பிடி அவலுக்கு
நண்பன் குசேலன் வறுமை
மட்டும் போக்க வில்லை அவனை
கண்ணனாய் ஆக்கிவிட தயங்கவில்லை
ருக்மிணி அங்கு வந்து அதை தடுத்தாள்!
அன்றும்,இன்றும்,என்றும் நட்பு
தியாகத்தின் சின்னம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Jul-17, 11:36 am)
பார்வை : 458

மேலே