கண் உறக்கம் -----முஹம்மத் ஸர்பான்

உன் விழிகளின் கடவுச்சீட்டில்
என் இதயத்தின் கடவுச் சொல்லை
மறந்து போன அகதியானேன்
பெண் எனும் தீக்குச்சி
ஆண் எனும் மெழுகை
உருக வைத்து ரசிக்கிறது
பனித்துளிகளால் முகம் கழுவி
கனவுகளை கருக்கலைக்க
இரவிடம் கற்றுக் கொள்கிறேன்
நீ கிள்ளி விளையாடும்
முகப்பருக்கள் புளூட்டோவின்
குட்டி குட்டி நிலாக்கள்
நீ வெட்டிய நகத்துண்டுகள்
ஹிட்லரின் ஆயுதப் பள்ளியில்
துப்பாக்கித் தோட்டாக்கள்
உன் உமிழ்நீர்த் துளிகள்
என் இறுதி நிமிடங்களில்
நான் உண்ணும் உணவுகள்
தோளோடு நீ சாய்ந்தால்
என் குழந்தை நிலவென்று
இறைவனிடம் சொல்லிடுவேன்
அவளுக்காய் நான்
சிந்திய கண்ணீர்த்துளிகள்
யுகப் பூக்களின் மகரந்தம்
அவள் சிரிக்கும் போது
என் மரணம் கூட
தூரத்தில் ஓடி ஒளிகிறது
பட்டாம் பூச்சிகள்
உன் இமைகளில்
விருந்துண்ண வருகிறதா?
கவி வரைய வருகிறதா?
மேற்கு வாசல் காற்று
என் புதைகுழியை
என்னிடம் காட்டியது
அதில் என் காதலி
கண்கள் மூடி
நிரந்தரமாக உறங்குகிறாள்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (14-Jul-17, 5:53 pm)
பார்வை : 194

மேலே