பெண்

அரிது அரிது மானிடராதல் அரிது
அதிலும் மங்கையராய் பிறப்பதற்கே
நல்ல மாதவம் செய்திட வேணுமம்மா !

விவசாயம் முதல் விண்வெளி முதல் அனைத்து துறைகளிலும் பெண்கள் கால் பதித்து உள்ளனர் ஆனாலும்
ஓடும் பேருந்தில் கற்பழிப்பு,
காதலி முகத்தில் காதலன் ஆசிட் வீச்சு,
நடந்து செல்பவர்களிடம் சில்மிஷம்
என இன்றும் அவர்களின் வாழ்க்கை
மிகவும் பரிதாபமாக உள்ளது.

அதிலும் கொஞ்சம் அழகாக இருக்கும் பெண்களின்
நிலைமை தான் இன்னும் மோசம், அவர்கள் வீட்டை
விட்டு வெளியில் வந்தால் போதும் அத்தனை கண்களும்
அவள் மீது தான் இருக்கும்(இருக்கிறது).

இதனாலேயே இன்று பல பெண்களின்
கனவுகளும்,
திறமைகளும்
தங்களின் குழந்தைகளை வளர்ப்பதிலும்,
சமையல் அறையிலும்,
துணி துவைப்பதிலேயுமே முடிகிறது.

பெண் என்பவள் வெறும் சதை மட்டுமே இல்லை அதையும்
தாண்டி அவளுக்கும் உணர்வுகள், உணர்ச்சிகள் என அனைத்தும் உள்ளன என்பதை பலர் புரிந்து கொள்வதில்லை.
தன்னையே தனக்கு அடையாளம் காட்டுவது ஒரு பெண்
என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

ஒரு பெண்ணிற்கு பத்து மாதம் மட்டும் தான் வலி என்று தெரிந்த நமக்கு ஒவ்வொரு மாதமும் வலி என்பது இருப்பது பலருக்கும் புலப்படுவதில்லை.

தன் இரத்தத்தை பாலாக தந்தவளை எந்த ஒரு நிலையிலும் கண் கலங்காமல் பார்த்துக் கொள்வது ஒவ்வொரு மகனின் கடமை,
தனக்காக தன் பெற்றோரையும் விட்டுட்டு வந்தவளுக்கு அந்த வாழ்ந்த வாழ்க்கையை விட விருப்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது ஒவ்வொரு கணவனின் கடமை.

உயிராக ஒரு தோழி கிடைத்தால் அவன் வாழ்க்கை
இன்னொரு பிறவி ஆனால் இந்த பிறவி அனைவருக்கும்
அமைந்து விடுவதில்லை.
காதலிப்பது தவறில்லை ஆனால் தவறான நபரை காதலித்து
அதில் தோல்வி அடைந்து பிறகு வருத்தப்படுவது தான் தவறு, வருத்தப்பட்டாலும் பயனில்லை.

எல்லாம் அமைந்த பெண்களின் நிலையே இப்படி என்றால் இன்னும்
தன் அப்பாவை இழந்த,
கணவனை இழந்த,
குழந்தைகளை இழந்த
பெண்களின் நிலையை வெறும் வார்த்தையில் சொல்லி விட முடியாது.

என்று பெண் குனியும் போது பார்ப்பதை விடுத்து நிமிரும் போது பார்க்க படுகிறாளோ அன்று தான் நாடு முன்னேறும்.

மொத்தத்தில் பெண் - மதிக்கப்பட வேண்டும்

#பெண்

எழுதியவர் : சாம்ராஜ் கவின் (14-Jul-17, 10:36 pm)
சேர்த்தது : Samraj Kavin
பார்வை : 907

சிறந்த கட்டுரைகள்

மேலே