மரங்கள்

மரங்கள் வாழும்போது
நிழல் கனி மழை கொடுத்தது
மரங்கள் தன் உயிரை இழந்து
கட்டில் கொடுத்து
கண்ணுறங்கவைத்தது
இரு உயிர்களை தாங்கி
மூன்றாவது உயிர்வளர
பூக்களுடன் கூட்டணி
வைத்தது...

மரம் கொடுத்த
கட்டிலிலே சிசுக்களும்
முளைத்ததன
மரம் தொட்டில் கொடுத்து
சிசுக்களுக்கு தாலாட்டு
பாடச்சொன்னது...

சிசுக்களுக்கு மரப்பாச்சி
நடைப்பயில நடைவண்டி
வயதான காலத்தில்
அயர்ந்து சாய நாற்காலி
நடை தள்ளாடும் நிலையில்
மூன்றாம் காலாக வந்தது...

இறுதியில் நல்லடக்கம்
செய்ய சவப்பெட்டி
என மனிதனின்
வாழ்க்கையில் மரங்கள்
கூடவே வருகிறது...

மனிதனோ மரம்
வளர்ப்பதில்லை மாறாக
சாலை விரிவாக்கம்
என மரங்களை அழிக்கிறான்
நன்றி என்றால் நாய்கள்
என்கிறோம்
மனிதன் என்று எப்போது மாறும்..

எழுதியவர் : செல்வமுத்து.M (15-Jul-17, 9:38 am)
Tanglish : marangkal
பார்வை : 317

மேலே