கோபத்தைத் தூண்டும் சமுதாயம்

கூட்டம் கூட்டமாக தவறுகளைச் செய்துவிட்டு அதற்குப் பெயர் யதார்த்தம் என்கிறீர்கள் வாய் கூசாமல்..
அதை அறியாமை என்றேன் நான்..

தாயிடம் அன்பு கொண்ட மகன் தன் மனைவியிடம் ஏன் அதே அன்பு கொள்வதில்லை?
அவளென்ன இயந்திரமா?

கணவனுக்காக உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த மனைவிகளே அதிகம்..
அவர்களின் நிலையை மற்றவர்களிடம் சொன்னால் அது புரியவில்லை..

ரோட்டிலே ஆண், பெண் சமமென்று கொக்கரிக்கிறது..
வீட்டிலே பெண்களே பெண்களைத் தாழ்த்திக் கொள்கிறார்கள்..
காலம் காலமாக பெண்ணைக் கல்வி கற்கவிடாமல் தடுத்த கூட்டம் தானே..

உலகின் விஷங்களையும் அறிகிறேன்.
அதற்கு மருந்துகளையும் அறிகிறேன்.
அன்பென்றால் என்னவென்று கேட்கும் உலகிற்கு அன்பின் வார்த்தைகள் புரியாது...

வெளிவேஷங்கள் தேவையில்லை...
பிறப்பால், இனத்தால் தானே பெரியவனென்ற எவனும் வாழ்ந்ததில்லை...

உண்மையின் வழியில் உலகிற்கு என்றும் உண்மை எடுத்துரைப்பேன்...
சுய முயற்கி கொண்டு பெறுவதே வெற்றி...

கோபம் கொண்டுள்ளேன் சமுதாயத்தோடு...
நான் சொல்ல வருவதை புரிந்து கொள்ளாமல்,
சிந்தித்துப் பார்க்காமல் இருக்கிறதே என்று...

உணவை அள்ளி உங்க வாய் வரைதான் கொடுக்க முடியுமே தவிர உங்களுக்காக நானே முழுங்க முடியாது...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (16-Jul-17, 9:02 am)
பார்வை : 1647

மேலே